இந்தியா

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணம்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்

Added : நவ 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி : அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது; பிரதமர் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் பல மாநிலங்களில் போராட்டம் நடத்தினர். அப்போது, வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறவில்லை. தற்போது

புதுச்சேரி : அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது; பிரதமர் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் பல மாநிலங்களில் போராட்டம் நடத்தினர். அப்போது, வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறவில்லை. தற்போது பஞ்சாப், உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. விவசாயிகள் ஆதரவு பெற வேண்டும் என்பதிற்காக, பிரதமர் திடீரென 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதற்கு பிரதமருக்கு நன்றி. விவசாயிகளிடம் பிரதமர் சரணாகதி அடைந்துள்ளார். சி.பி.ஐ. இயக்குநர், அமலாக்க பிரிவு துறை தலைவர் ஓய்வு பெற்றாலும், மீண்டும் 5 ஆண்டுகள் பதவியை நீட்டிக்கும் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்தை நாடமாளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும். புதுச்சேரியில் பெய்த மழையால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தோம். ஆனால், முதல்வர் எந்தவித பதிலும் கூறவில்லை.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 17 செ.மீ., மழை பெய்துள்ளது. எனவே, அனைத்து ரேஷன் கார்டுக்கும் ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் வரி குறைப்பால், அடுத்த ஆண்டிற்கு ரூ. 1,800 கோடி வருமான வரி இழப்பு ஏற்படும். எனவே, வருமானத்தை ஈடுசெய்ய ஆலோசனை வழங்க வேண்டும் என நிதித்துறை செயலர் அனைத்து துறைக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதிலிருந்து புதுச்சேரி அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பது தெரிகிறது.இதனை சரிசெய்ய புதுச்சேரிக்கு மத்திய அரசு தாராளமாக நிதி வழங்க வேண்டும். முதல்வர் ரங்கசாமி, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து கூடுதல் நிதி பெற்றால் மட்டுமே பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். இல்லையென்றால் மாநில அரசு திவாலாகி விடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X