இந்தியா

இடைக்கால நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்: முதல்வர் ரங்கசாமி

Added : நவ 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பிற்கு இடைக்கால நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக முதல்வர் ரங்கசாமி கூறினார்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக சங்கராபரணி மற்றும் தென்பெண்ணையாறுகளில் நேற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், கரையோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.வெள்ளம் சூழ்ந்த

புதுச்சேரி : புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பிற்கு இடைக்கால நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக முதல்வர் ரங்கசாமி கூறினார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக சங்கராபரணி மற்றும் தென்பெண்ணையாறுகளில் நேற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், கரையோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.வெள்ளம் சூழ்ந்த அரியாங்குப்பம், நோணாங்குப்பம் என்.ஆர்.நகர், இடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை நேற்று காலை முதல்வர் ரங்கசாமி பார்வையிட்டு, மீட்பு பணியை துரிதப்படுத்தினார்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக பள்ளிகளில் தங்க வைக்கவும், அவர்களுக்கு உணவு வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.பின்னர் முதல்வர் கூறியதாவது;புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. அலை சீற்றத்தால், மழை நீரை கடல் உள்வாங்கவில்லை. இதன் காரணமாக காமராஜர் நகர், சுதானா நகர், இந்திரா சிக்னல் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கியது. தற்போது மழை நின்றதால், படிப்படியாக மழை நீர் வடியத் துவங்கி உள்ளது.வீடூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, உபரி நீர் திறக்கப்பட்டதால், சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அரியாங்குப்பம், நோணாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை நீரை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. விளை நிலங்களில் உள்ள தண்ணீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது. எம்.எல்.ஏ.,க்களும் மக்களுடன் இணைந்து தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். மழையால் பாதித்தவர்களுக்கு நிவாரணம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனமழையில் பாதித்தவர்களையும் கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்கப்படும்.

மாநிலத்தில், மழை பாதிப்பு குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். மழை பாதிப்பிற்கு இடைக்கால நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன். மழை பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்க உள்ளேன். இவ்வாறு முதல்வர் கூறினார்.பேட்டியின் போது சபாநாயகர் செல்வம், தட்சணாமூர்த்தி எம்.எல்.ஏ., கலெக்டர் பூர்வா கார்க் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X