பொது செய்தி

தமிழ்நாடு

கீழணை கொள்ளிடம் ஆற்றில் 80,000 கன அடி தண்ணீர் திறப்பு

Added : நவ 20, 2021
Share
Advertisement
காட்டுமன்னார்கோவில் : மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவாக வெளியேற்றப்படும் உபரி நீரால், கீழணை கொள்ளிடம் ஆற்றில் 80,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது.மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு அதிகளவு தண்ணீர் வரத்து இருப்பதால், உபரி நீர் 60,000 கன அடிக்கு மேல் திறக்கப்படுகிறது. திருச்சி, தஞ்சை டெல்டா பகுதிகளில் பெய்த மழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்

காட்டுமன்னார்கோவில் : மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவாக வெளியேற்றப்படும் உபரி நீரால், கீழணை கொள்ளிடம் ஆற்றில் 80,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது.

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு அதிகளவு தண்ணீர் வரத்து இருப்பதால், உபரி நீர் 60,000 கன அடிக்கு மேல் திறக்கப்படுகிறது. திருச்சி, தஞ்சை டெல்டா பகுதிகளில் பெய்த மழையால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.முக்கொம்பு மேல் அணையிலிருந்து 50,000 கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படுகிறது. காவிரி ஆறு வழியாக கல்லணைக்கு அதிகளவு தண்ணீர் வரத்து உள்ளது. இதனால், கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 20,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

டெல்டா பகுதி மழை தண்ணீர் சேர்ந்து கீழணைக்கு 80,000 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. கீழணை நீர் மட்டம் 8.3 அடியாக உள்ளது. கீழணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை. அணைக்கு வரும் 80,000 கன அடி தண்ணீர் கீழ் கொள்ளிடம் ஆற்றில் திறந்து வெளியேற்றப்படுகிறது.

மேட்டூரில் தண்ணீர் திறப்பு அளவு அதிகரித்தால், கீழ் கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்ற உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர். கீழ் கொள்ளிடம் ஆற்றில் கடந்த 3ம் தேதி முதல் 17 நாட்களாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கடலுார் மாவட்டம் வீராணம் ஏரி நீர் மட்டம் 45.40 அடி. ஏரிக்கு மழை தண்ணீர் 645 கன அடி வரத்து உள்ளது. ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு 61 கன அடி நீரும், சேத்தியாத்தோப்பு பூதங்குடி வி.என்.எஸ் மதகு வழியாக வெள்ளாற்றில் 335 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. வீராணம் ஏரியில் 935.20 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X