பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த இரண்டு ஷெட்டர்கள் வெள்ளத்தில் அடித்துச்சென்றது

Added : நவ 20, 2021
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே எல்லீஸ் அணைக்கட்டில் உடைந்து சேதமடைந்த இரண்டு ஷெட்டர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏனாதிமங்கலம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் 1950ம் ஆண்டு கட்டப்பட்ட எல்லீஸ் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டின் வலது மற்றும் இடது புறம் பகுதிகளில் தலா 4 ஷெட்டர்கள்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே எல்லீஸ் அணைக்கட்டில் உடைந்து சேதமடைந்த இரண்டு ஷெட்டர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏனாதிமங்கலம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் 1950ம் ஆண்டு கட்டப்பட்ட எல்லீஸ் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டின் வலது மற்றும் இடது புறம் பகுதிகளில் தலா 4 ஷெட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அணைக்கட்டின் மூலம் 20 ஆயிரத்து 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கடந்த மாதம் 23ம் தேதி அணைக்கட்டின் வலது புறம் உள்ள ஷெட்டர்கள் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தன.

இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் தென்பெண்ணை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால், அணைக்கட்டில் சேதமடைந்திருந்த 2 ஷெட்டர்கள் நேற்று மாலை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X