பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும்:அழகிரி

Added : நவ 20, 2021
Share
Advertisement
கடலுார் : மாநில அரசுக்கு மத்திய அரசு மழை பாதிப்பு நிவாரணம் வழங்க வேண்டுமென, காங்., மாநிலத் தலைவர் அழகிரி கூறினார். கடலுார், மஞ்சக்குப்பம் திடீர் குப்பத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை , காங்., மாநில தலைவர் அழகிரி பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார்.பின், அவர் அளித்த பேட்டி: கடலுார் பகுதி வெள்ளத்தால் தத்தளிக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளை

கடலுார் : மாநில அரசுக்கு மத்திய அரசு மழை பாதிப்பு நிவாரணம் வழங்க வேண்டுமென, காங்., மாநிலத் தலைவர் அழகிரி கூறினார்.

கடலுார், மஞ்சக்குப்பம் திடீர் குப்பத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை , காங்., மாநில தலைவர் அழகிரி பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார்.பின், அவர் அளித்த பேட்டி: கடலுார் பகுதி வெள்ளத்தால் தத்தளிக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளை இழந்துள்ளனர். மழையால் பாதித்த மக்களின் தேவைகளை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும்.

மாநில அரசுக்கு மத்திய அரசு மழை பாதிப்பு நிவாரணம் வழங்க வேண்டும். மழை பாதிப்புகளை மத்தியக் குழு ஆய்வு செய்து நிவாரணம் வழங்கும் முன் மத்திய அரசு முன்பணமாக மாநில அரசுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கடலுாரில் வெள்ளப் பெருக்கு குறித்து மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கையாக மக்களுக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும். வருங்காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றிருப்பது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி. இடைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாகவே மத்திய அரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, அங்கு வந்த அய்யப்பன் எம்.எல்.ஏ.,விடம் மழை பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். மாவட்டத் தலைவர் திலகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், நகரத் தலைவர் வேலுசாமி, மாவட்ட சிறப்பு அழைப்பாளர் ரங்கமணி, ரமேஷ், ரவிக்குமார் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X