சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெள்ளத்தில் சிக்கிய வாலிபர் பனைமரம் மீது ஏறி தப்பினார்

Added : நவ 20, 2021
Share
Advertisement
விழுப்புரம் : வெள்ளப்பெருக்கில் சிக்கி பனைமரம் மீது அமர்ந்து தப்பிய வாலிபரை கிராம மக்கள் மீட்டனர்.விழுப்புரம் அடுத்த செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல், 48; இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் தனது ஆட்டுக் கொட்டகையில் இருந்துள்ளார். அவரது மகன் பிரதாப், 18; நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு முருகவேலுக்கு சாப்பாடு எடுத்துச்சென்றுள்ளார்.அப்போது, பம்பை ஆற்றில்

விழுப்புரம் : வெள்ளப்பெருக்கில் சிக்கி பனைமரம் மீது அமர்ந்து தப்பிய வாலிபரை கிராம மக்கள் மீட்டனர்.

விழுப்புரம் அடுத்த செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல், 48; இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் தனது ஆட்டுக் கொட்டகையில் இருந்துள்ளார். அவரது மகன் பிரதாப், 18; நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு முருகவேலுக்கு சாப்பாடு எடுத்துச்சென்றுள்ளார்.அப்போது, பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் முருகவேல், பிரதாப் இருவரும் சிக்கிக்கொண்டனர்.

இருவரும் ஆற்று வெள்ளத்தில், விழுப்புரம் அடுத்த பொய்யப்பாக்கம் ஏரி வரை 3 கி.மீ., துாரம் அடித்து செல்லப்பட்டனர்.பொய்யப்பாக்கம் அருகே ஏரியில் இருந்த பனைமரத்தில் முருகவேல், பிரதாப் இருவரும் பற்றிக் கொண்டு ஏறி அமர்ந்துள்ளனர். இரவு முழுதும் விடிய விடிய மரத்தில் அமர்ந்திருந்தவர்கள். தண்ணீர் வடியாததால், நேற்று மாலை 4:00 மணிக்கு முருகவேல் மட்டும் ஏரியில் நீந்தியபடி பொய்யப்பாக்கம் கிராமத்திற்கு வந்தார்.

அங்கு தனது மகன் சிக்கிக்கொண்டது குறித்து கிராம மக்களிடம் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து கிராமத்து இளைஞர்கள் கயிறு மூலம் ஏரிக்கு நடுவில் உள்ள பனைமரத்திற்குச் சென்றனர். அங்கிருந்த பிரதாப்பை மீட்டு, இரவு 7:00 மணியளவில் கரைக்கு கொண்டு வந்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X