கள்ளக்குறிச்சி : சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து விநாடிக்கு 7,042 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியின் குறுக்கே மணிமுக்தா அணை உள்ளது. கல்வராயன்மலை பகுதிகளில் பெய்யும் மழை மணி மற்றும் முக்தா ஆறுகள் வழியாகவும், மூரார்பாளையம் பாப்பாங்கால் ஓடையில் இருந்தும் அணைக்கு நீர் வரத்து வருகிறது.கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக அணையின் மொத்த கொள்ளளவான 736.96 மில்லியன் கன அடியில் (36 அடி) தற்போது 590 மில்லியன் கன அடி (34 அடி) நீர் நிரம்பியுள்ளது.
தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து இருந்ததால் பாதுகாப்பு கருதி, நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணியளவில் மணிமுக்தா அணை புதிய ஷெட்டரில் இருந்து விநாடிக்கு 11 ஆயிரத்து 624 கன அடி தண்ணீர் மணிமுக்தா ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆறு மற்றும் பாசன வாய்க்காலை ஒட்டியவாறு இருந்த விளை நிலங்கள், வீடுகளில் தண்ணீர் புகுந்தது.மழையின் அளவு நேற்று காலை குறைந்ததால் நீர்வரத்து குறைந்து அணையில் இருந்து நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி 7,042 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE