அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேளாண் சட்டம் வாபஸ்: தலைவர்கள் கருத்து

Added : நவ 20, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்: மூன்று வேளாண் சட்டங்களில் உள்ள பயன்களை, விவசாயிகளின் ஒரு பிரிவினரிடம் புரிய வைக்க முடியவில்லை என தெரிவித்து, மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக, பிரதமர் அறிவித்துள்ளார்.இதன் வழியே, பிரதமருக்கு உள்ள பெருந்தன்மையும், விவசாயிகள் மீது அவருக்கு உள்ள அக்கறையும் வெளிப்பட்டுள்ளது. இதற்காக, அ.தி.மு.க., சார்பில், பிரதமருக்கு
வேளாண் சட்டம் வாபஸ்: தலைவர்கள் கருத்து

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்: மூன்று வேளாண் சட்டங்களில் உள்ள பயன்களை, விவசாயிகளின் ஒரு பிரிவினரிடம் புரிய வைக்க முடியவில்லை என தெரிவித்து, மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக, பிரதமர் அறிவித்துள்ளார்.இதன் வழியே, பிரதமருக்கு உள்ள பெருந்தன்மையும், விவசாயிகள் மீது அவருக்கு உள்ள அக்கறையும் வெளிப்பட்டுள்ளது. இதற்காக, அ.தி.மு.க., சார்பில், பிரதமருக்கு நன்றி.

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி: வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுகிற முடிவை எடுக்கக் காரணமாக இருந்த, விவசாய சங்கங்களுக்கும், அவர்களது கோரிக்கையை தேசிய அளவில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த ராகுலுக்கும் கிடைத்த வெற்றி.முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்: அடுத்த ஆண்டு பஞ்சாப், உ.பி., உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் அச்சத்தால் தான், மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இது விவசாயிகளுக்கு கிடைத்த பெரும் வெற்றி. கோதாவரி - காவிரி உள்ளிட்ட நதிநீர் இணைப்பு திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்.

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: இம்மாதிரி மக்கள் விரோத சட்டங்களை அதிகாரம் இருக்கிற வரையில், மத்திய அரசு கொண்டு வராது என்ற நிலையை, விவசாயிகள் ஏற்படுத்தி விட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: மத்திய அரசு இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது, விவசாயிகளின் போராட்டங்களுக்கு மதிப்பளித்து அல்ல, சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அது ஆடும் நாடகம் தான் இது.

முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொகிதீன்: பிடிவாதப் போக்கைக் கைவிட்டு, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர் பாராட்டுக்குரியவர்.

த.மா.கா., தலைவர் வாசன்: மத்திய அரசு விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் தொடர்ந்து நன்மை பயக்கும் வகையில் செயல்படுகிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி இந்த முடிவு எடுத்திருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: உறுதியான மக்கள் புரட்சிக்கு முன், எத்தகைய வலிமையை பெற்ற அரசும் வீழ்ந்தே தீரும் என்பதற்கு, மற்றொரு வரலாற்றுச் சான்றாக விவசாயிகள் போரட்டம் அமைந்துள்ளது. மக்களின் திரட்சியே மாற்றத்திற்கான புரட்சி என்ற வரலாறு மீண்டும் மெய்ப்பித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உட்பட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
20-நவ-202114:54:55 IST Report Abuse
மலரின் மகள் எதிர்க்கட்சிகள் வைத்திருந்த முக்கிய தேர்தல் ஆயுதம் எடுப்பதற்கு முன்னதாகவே அழிக்கப்பட்டுவிட்டது என்பது எதிர்க்கட்சிகளுக்கு எப்படி வெற்றியாகும்.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
20-நவ-202114:51:33 IST Report Abuse
sankar இது என்ன நியாயம். சிதம்பரம் போட்டோவை காட்டிவிட்டு அவர் சொன்னதைப் போடவில்லையே. தினமலருக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை.
Rate this:
C.SRIRAM - CHENNAI,இந்தியா
20-நவ-202121:31:48 IST Report Abuse
C.SRIRAMஇவர் எப்படியும் ஏதாவது உபயோகமில்லாத வெட்டி கருத்துக்களை மட்டும் தான் சொல்வார் என்பதினால் இருக்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X