அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெய்பீம் சர்ச்சை: சூர்யா, ஜோதிகா மீது போலீசில் பா.ம.க., புகார்

Updated : நவ 20, 2021 | Added : நவ 20, 2021 | கருத்துகள் (71)
Share
Advertisement
சென்னை : நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீசில் பா.ம.க.,வினர் புகார் அளித்தனர்.சூர்யா நடிப்பில் வெளியான, ஜெய்பீம் திரைப்படம், வன்னியர்-இருளர் சமுதாயம் இடையே கலவரத்தை துாண்டும் விதமாக அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக, பா.ம.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பா.ம.க., மாநில நிர்வாகிகள், சென்னை அண்ணா
Jai Bhim, Suriya, Jyothika, PMK

சென்னை : நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீசில் பா.ம.க.,வினர் புகார் அளித்தனர்.

சூர்யா நடிப்பில் வெளியான, ஜெய்பீம் திரைப்படம், வன்னியர்-இருளர் சமுதாயம் இடையே கலவரத்தை துாண்டும் விதமாக அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக, பா.ம.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பா.ம.க., மாநில நிர்வாகிகள், சென்னை அண்ணா நகர் உதவி கமிஷனரிடம் நேற்று புகார் அளித்தனர்.


latest tamil news



அதில், அவர்கள் கூறியுள்ளதாவது: ஜெய்பீம் திரைப்படத்தில், வன்னியர் சமூகம் குறித்த அவதுாறான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. வன்னிய சமூகத்தினரின் எண்ணங்களை புண்படுத்தும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளன. ஜாதி வெறியை துாண்டும் விதமாக காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், கலவரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, படத்தின் இயக்குனர் ஞானவேல், தயாரிப்பாளர் ஜோதிகா, நடிகர் சூர்யா ஆகியோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.


'ரூ.1 லட்சம் மணியார்டர்'


'சூர்யா வருத்தம் தெரிவித்தால் 1 லட்சம் ரூபாய் மணியார்டர் செய்வேன்' என பா.ம.க., மாநில பொதுச்செயலர் கே.என்.சேகர் கூறினார்.

ஜெய்பீம் திரைப்படத்தை தடை செய்யக் கோரி பா.ம.க.,வினர், புளியந்தோப்பு காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். அம்பத்துார் துணை கமிஷனர் அலுவலகத்தில் பா.ம.க. மாநில துணை பொதுசெயலர் கே.என்.சேகர் புகார் மனு அளித்தார்.


latest tamil news




அவர் அளித்த பேட்டி


சூர்யா, ஞானவேல், ரஞ்சித், கண்ணன் இவர்கள் யார்? எங்களது சமுதாயத்தை இழிவாக காட்டுவதற்கு இவர்களுக்கு உரிமை கொடுத்தது யார்? சூர்யா வீட்டிற்கு முன் ஐந்து காவலர்களை நிறுத்தினால் அமைதி வந்துவிடுமா? சிவகுமார் குடும்பத்தில் இருந்து அடுத்த படம் வராதா?

தமிழகத்தில் நிலையான ஆட்சி வேண்டுமென்றால், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு அமைதியாக வேண்டும் என நினைத்தால், சூர்யா வருத்தம் தெரிவிக்க வேண்டும். வருத்தம் தெரிவித்த ஒரு மணி நேரத்தில், 1 லட்சம் ரூபாய் நான் 'மணியார்டர்' செய்கிறேன்.இவ்வாறு அவர் கூறி னார்.

பா.ம.க. மாநில துணை பொதுச்செயலர் பிரின்ஸ், நேற்று திருச்சி எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகாரில், 'ஜாதி மோதல்களை உருவாக்கும் வகையில் படம் எடுத்துள்ள, ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாஆகியோர் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
21-நவ-202104:18:57 IST Report Abuse
meenakshisundaram சூர்யா அவரின் ரசிகர்களுக்கு வேண்டுமானால் சிறந்த நடிகராக (?) தெரியலாம் -ஆனால் மிக தவறான முறையில் ஒரு படத்த தயாரித்த தயாரிப்பாளராக மாறியத மக்கள் மறக்க மாட்டார்கள் .எடுத்த கேட்ட பெயர் போகவே போகாது .
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
20-நவ-202122:52:31 IST Report Abuse
jagan நீதிபதி சந்துரு ஏன் வாயை திறக்க மாட்டேன் என்கிறார். அநீதியை எதிர்ப்பவர் என்றால், வன்னியர்க்கு கூட்டாதால் இழைக்கப்படும் அநீதியையும் சேர்த்து தானே எதிர்க்க வேண்டும். வாயில் என்ன கொழக்கட்டையா இல்லை சித்திரக்குள்ளன் சொறியா விடம் காசு வாங்கி ஆப் ஆகிவிட்டாரா?
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
20-நவ-202121:18:48 IST Report Abuse
jagan ஜாதிவெறி படம் நல்லா போகுது. அடுத்து 'எதற்கும் துணிந்து' இன்னொரு ஜாதி வெறி தூண்டும் படம் வெளியிட வேண்டியது தான். -இப்படிக்கு சித்திரக்குள்ளன் சொறியா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X