சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

இந்த நல்ல காரியத்தை செய்ய இப்போது தான் உங்களுக்கு ஞானோதயம் வந்துள்ளதா?

Updated : நவ 20, 2021 | Added : நவ 20, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினரின் பெயர்களில் உள்ள, 'ன்' விகுதியை, 'ர்' விகுதியாக மாற்றி, ஜாதி சான்றிதழ்களை வழங்க கருணாநிதி ஆட்சிக் காலத்திலேயே ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதை மீண்டும் புதிய அரசாணையாகப் பிறப்பிக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தோம்.கருணாநிதி முதல்வராக இருந்து,

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினரின் பெயர்களில் உள்ள, 'ன்' விகுதியை, 'ர்' விகுதியாக மாற்றி, ஜாதி சான்றிதழ்களை வழங்க கருணாநிதி ஆட்சிக் காலத்திலேயே ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதை மீண்டும் புதிய அரசாணையாகப் பிறப்பிக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தோம்.latest tamil news
கருணாநிதி முதல்வராக இருந்து, பத்தாண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இந்த நல்ல காரியத்தை செய்ய இப்போது தான் உங்களுக்கு ஞானோதயம் வந்துள்ளதா?புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை: நிஜ நிகழ்வுகளை திரையில் காட்டும்போது, சமூக பிரிவினைகளை விரிவுப்படுத்தாமல் எடுப்பது படைப்பாளிகளின் பொறுப்பு. ஜாதிகளுக்கிடையே பிணக்குகளை உண்டாக்கி சமூகங்களிடையே நல்லிணக்கத்தை கெடுத்து, வரட்டுத்தனமாக சமூக நீதி என்று மட்டும் பேச கூடாது.


latest tamil newsகோலிவுட்டில் கதை வறட்சி ஏற்பட்டுள்ளதால், பழைய கதை, பண்டைய கதைகளை தேடிப் பிடித்து, ஜாதிச்சாயம் பூசி, படமாக எடுத்து விற்க பலர் முன்வந்துள்ளனர். இதனால் அவர்கள் பை நிறையும். ஆனால், சமுதாயத்தின் நிம்மதி பறிபோகுமே!தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை: அடுத்த 25 ஆண்டுகள் முக்கியமானவை என்கிறார், பிரதமர் மோடி. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் அப்படியே சொல்கிறது. 2024ல் மீண்டும், பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் மதசார்பற்ற அரசியல் சாசனத்தை மனுவாத சாசனமாக மாற்றி விடுவர். இவர்களை தோற்கடிப்பதே நம் லட்சியமாக இருக்க வேண்டும்.


latest tamil news
இன்னும் மூன்றாண்டுகள் கழித்து வரும் லோக்சபா தேர்தலுக்கு இப்போதே ஆள் திரட்டுகிறீர்களா... முடிவு மக்கள் கையில் தான் உள்ளது என்பதை மறந்து விட்டீர்களே...நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: 'ஆன்லைன்' தேர்வுகளை வலியுறுத்தி, மதுரையில் அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஆன்லைனிலேயே தேர்வுகளை நடத்த மாநில அரசு முன்வர வேண்டும்.


latest tamil news
ஆன்லைனில் பாடம் நடத்தினால், ஆன்லைனில் தேர்வு நடத்துவது தான் சரியாக இருக்கும். இதை வலியுறுத்திய மாணவர்களை கைது செய்திருப்பது தவறு!தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை: குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத் மற்றும் சில நகரங்களில் சிறு வியாபாரிகள் அசைவ உணவு வகைகளை விற்க தடை விதிக்கப்பட்டிருப்பதால், 50 ஆயிரம் பேர் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பது மிகப்பெரும் கொடுமை. சைவ உணவு சுத்தமானதாம். அசைவம் அசுத்தமாம்!


latest tamil news
குஜராத் முதல்வராக மோடி இருந்தவரை, எல்லார் கண்களும் குஜராத் மீதே இருந்தன. சமீப காலமாக மாறி இருந்தது. இப்போது, உங்களைப் போன்ற மகானுபாவர்கள் மீண்டும் துவக்கி விட்டீர்கள் போலிருக்கிறதே!

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-நவ-202119:10:29 IST Report Abuse
Natarajan Ramanathan சந்தேகமே இல்லாமல் அசைவம் மிக அசுத்தமானதுதான். இதை அசைவம் சாப்பிடுபவர்களே ஒத்துக்கொள்வர். அதனால்தான் அனைத்து மதத்தவரும் அனைத்து நாடுகளிலும் விரதம் என்றால் அசைவம் தவிர்க்கிறார்கள்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
20-நவ-202116:37:24 IST Report Abuse
sankaseshan சம்பத்து. தமிழ்நாட்டில். சாதியை. வைத்து பிழைப்பு ஓடுது. அரசியல். வியாதிகளுக்கும் சினிமாக்காரனுக்கும். சாதி ஒழியனும். என்று. பேசுவார்கள். செய்ய. மாட்டார்கள் ஷ்யாம். சொன்னது. சரிதான். குருமா மலைவாழ். மக்களுக்கும் பழங்குடியினருக்கும் என்ன. நன்மை. செய்திருக்கிறான். பேராசிரியர். ? அருணனின். கட்சி. தேய்ந்து கொண்டிருக்கிறது. மனுநீதியை படித்திருக்கனா. ? பீட்டர். கட்சி. சரிந்து கொண்டிருக்கிறது குஜராத்தை குற்றம். சொல்லி. சமாதானம் கொள்ளட்டும்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
20-நவ-202115:03:23 IST Report Abuse
மலரின் மகள் பெயர்களில் கூட ன் விகுதிதானே இருக்கிறது.அதையும் ர் விகுதியாக மாற்றியிருக்கலாம். பெயர்மாற்றம் செய்யும் போதே இதை அவரும் சந்தித்திருக்கலாம். ன் விகுதி தனிமனிதனையும் ர் விகுதி பலரையும் இணைத்து குறிக்கும். ஒருமைப்பாண்மை, தன்மைப்பன்மை வேறுவிசயமா?
Rate this:
sridhar - Chennai,இந்தியா
20-நவ-202115:57:20 IST Report Abuse
sridharஹோட்டலில் இனி டிபன் என்று கேட்க கூடாது , டிபர் என்று சொல்ல வேண்டும் . கடையில் பன் கிடையாது , பர் என்று கேட்கவேண்டும்....
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்இனி கொசு அய்யன் என்று போடலாமா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X