பொது செய்தி

தமிழ்நாடு

4 பேரு... 4 வருஷம்... 4 கோடி: கோவையில் 'ஸ்மார்ட் சிட்டி' ஆலோசகர்களுக்கு தரப்பட்ட ஊதியம்

Updated : நவ 20, 2021 | Added : நவ 20, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
கோவை 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்கு ஆலோசகர்கள் என்ற பெயரில், நான்கு பேருக்கு நான்கு ஆண்டுகளில், நான்கு கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊதியம் தரப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், 1,142 கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்பில் 73 பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, இதுவரை 322.62 கோடி ரூபாய் மதிப்பிலான 56 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.இத்திட்டம் துவக்கப்பட்ட
கோவை,ஸ்மார்ட் சிட்டி,ஆலோசகர், ஊதியம்

கோவை 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்கு ஆலோசகர்கள் என்ற பெயரில், நான்கு பேருக்கு நான்கு ஆண்டுகளில், நான்கு கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊதியம் தரப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், 1,142 கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்பில் 73 பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, இதுவரை 322.62 கோடி ரூபாய் மதிப்பிலான 56 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் துவக்கப்பட்ட போது, மாநகராட்சி சார்பில் ஆலோசகர்கள் சிலர் நியமிக்கப்பட்டனர். ஆட்சி மாறிய பின், கடந்த ஆகஸ்ட்டில்தான் இவர்கள் பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளனர். இத்திட்டத்துக்கான ஆலோசகர்கள் யார் யார், அவர்களுக்கு தரப்பட்டுள்ள ஊதியம் தொடர்பான பல்வேறு தகவல்களையும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோவையைச் சேர்ந்த வக்கீல் லோகநாதன் வாங்கியுள்ளார்.அதில், 2018ம் ஆண்டில் நிர்வாக ஆலோசகர்களாக (PMC-Project Management Consultant) நியமித்ததிலிருந்து, நான்கு ஆண்டுகள் தரப்பட்ட ஊதிய விபரங்கள் தரப்பட்டுள்ளன.


வல்லுனர்களின் சம்பள வரலாறு!


தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட, பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற நான்கு பேர்தான், குழுவின் தலைவர், நகர்ப்புற கட்டமைப்பு வல்லுனர், கொள்முதல் மற்றும் ஒப்பந்த வல்லுனர், போக்குவரத்து வல்லுனர் என்ற நான்கு பொறுப்புகளில், 2018ம் ஆண்டில் நியமிக்கப்பட்டுள்ளனர்.அப்போது குழுத் தலைவருக்கு மாதத்துக்கு 2 லட்சத்து 92 ஆயிரத்து 592 ரூபாயும், கட்டமைப்பு வல்லுனருக்கும், போக்குவரத்து வல்லுனருக்கும் தலா 2 லட்சத்து 79 ஆயிரத்து 870 ரூபாயும், கொள்முதல் மற்றும் ஒப்பந்த வல்லுனருக்கு 2 லட்சத்து 67 ஆயிரத்து 148 ரூபாயும் ஊதியமாகத் தரப்பட்டுள்ளது.


ஆண்டுக்கு ஒரு கோடி!


இதற்காக மாதத்துக்கு 11 லட்சத்து 19 ஆயிரத்து 480 ரூபாயும், ஆண்டுக்கு ஒரு கோடியே 34 லட்சத்து 33 ஆயிரத்து 760 ரூபாயும் 'ஸ்மார்ட் சிட்டி' நிதியிலிருந்து 18 சதவீத ஜி.எஸ்.டி., தொகையுடன் சேர்த்து செலவிடப்பட்டுள்ளது.நான்கு ஆண்டுகளில், குழுத் தலைவரைத் தவிர, மற்றவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்; ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளது.

இவர்களில் குழுத் தலைவருக்கு இறுதியாக மாதாந்திர ஊதியம் 18 சதவீதம் ஜி.எஸ்.டி.,யுடன் சேர்த்து, 3 லட்சத்து 41 ஆயிரத்து 278 ரூபாயும், போக்குவரத்து, கட்டமைப்பு வல்லுனர்களுக்கு தலா 3 லட்சத்து 26 ஆயிரத்து 440 ரூபாயும், கொள்முதல் மற்றும் ஒப்பந்த வல்லுனருக்கு 3 லட்சத்து 11 ஆயிரத்து 603 ரூபாயும் ஊதியமாகத் தரப்பட்டுள்ளது.


latest tamil news
அதாவது, மாதத்துக்கு 13 லட்சத்து 5,761 ரூபாயும், ஆண்டுக்கு ஒரு கோடியே 56 லட்சத்து 69 ஆயிரத்து 132 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.ஆக மொத்தத்தில், இந்த நான்கு ஆலோசகர்களுக்கு மட்டும், நான்கு ஆண்டுகளில் நான்கு கோடி ரூபாய்க்கு மேல் ஊதியமாக, 'ஸ்மார்ட் சிட்டி' நிதியிலிருந்து வாரி வழங்கப்பட்டுள்ளது.


என்னதான் வேலை செய்தார்கள்?


இதே கோவை மாநகராட்சியில்தான், பல ரோடுகள் கந்தலாகிக் கிடக்கும் நிலையில், நிதியில்லை என்று 150 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. துாய்மைப் பணியாளர்கள் பலருக்கும் பணி நிரந்தரம் செய்யப்படாமல், ஒப்பந்த அடிப்படையில் அடிமாட்டு விலையில் சம்பளம் தரப்படுகிறது. ஆனால் முந்தைய ஆட்சியில் ஆலோசகர்கள் என்ற பெயரில், அப்போதிருந்த ஆளும்கட்சியினராலும், அதிகாரிகளாலும் நியமிக்கப்பட்ட இவர்களுக்கு பல கோடி ரூபாய் ஊதியத்துக்காக செலவிடப்பட்டுள்ளது.

அப்படி இந்த நான்கு பேரும், நான்கு ஆண்டுகளில் என்னென்ன ஆலோசனை தந்தார்கள், என்ன தவறுகளைக் கண்டுபிடித்துத் திருத்தினார்கள் என்று தெரியவில்லை.ஒரு திட்டம் தயாரிக்கப்படும்போது, ஆலோசகர்களிடம் ஒப்படைத்து, அதை வடிவமைப்பது வழக்கம்தான். ஆனால் திட்டம் துவக்கப்பட்டு, பணிகள் நடந்தபோதும், ஆலோசகர்களுக்கு ஏன் இவ்வளவு செலவிட வேண்டும், உண்மையிலேயே இவர்களுக்கு இந்த ஊதியம் முழுதாகப் போய்ச் சேர்ந்ததா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. முதல்வர் அமைக்கும் விசாரணை கமிஷன் இதையும் விசாரிப்பது அவசியம்.

-நமது நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
20-நவ-202122:58:15 IST Report Abuse
Barakat Ali ஊழலுக்காகவே கொண்டு வரப்பட்ட திட்டம் போல
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
20-நவ-202122:15:33 IST Report Abuse
S. Narayanan எல்லா ஆலோசனையும் ஒரே நேரத்தில் வழங்கி விட்டால் எப்படி சம்பாதிக்க முடியும் அதனால் ஆறு மாதத்துக்கு ஒரு முறை தான் ஆலோசனை வழங்கப்படும்.
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
20-நவ-202120:11:27 IST Report Abuse
அம்பி ஐயர் ஏற்கெனவே அரசு அதிகாரிகளாக வேலை செய்து பல லட்சங்கள் ஊதியமாகபெற்றும் மேலும் பல கோடிகள் கிம்பளமாக சுருட்டியும் ஓய்வு பெற்றும் ஓய்வூதியமே பல ஆயிரங்கள் பெற்று வரும் இவர்களுக்கு மாதம் இரண்டு லட்ர்சம் ரூபாய் சம்பளம் என்பது அக்கிரமம்.... அவர்களும் கொஞ்சங்கூட வெக்கமே இல்லாமல் மனசாட்சியே இல்லாமல் வேலையே செய்யாமல் இப்படிப் பணம் சம்பாதித்துள்ளார்களே.....??? இது அவர்களுக்கு ஒட்டுமா.....???? மனசாட்சி இருந்தால் அவர்கள் சம்பளப் பணம் முழுவதையும் திருப்பித் தர வேண்டும்..... பல ஆயிரங்கள் ஓய்வூதியம் பெறுபவர்கள் இலவசமாக ஆலோசனைகள் செய்யவோ சொல்லவோ கூடாதா....???அநியாயம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X