பொது செய்தி

இந்தியா

நெகிழ்ச்சியில் விவசாயிகள் குடும்பம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கும் எதிராக, கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக நடந்து வந்த விவசாயிகளின் போராட்டத்தில் 700க்கும் அதிகமான விவசாயிகள் உயிர் தியாகம் செய்துள்ளனர். இப்படி பல தியாகங்களை செய்து விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தரும் வகையில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார். உயிரிழந்த விவசாயிகளின்

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கும் எதிராக, கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக நடந்து வந்த விவசாயிகளின் போராட்டத்தில் 700க்கும் அதிகமான விவசாயிகள் உயிர் தியாகம் செய்துள்ளனர். இப்படி பல தியாகங்களை செய்து விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தரும் வகையில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினர் இதை முழுமனதுடன் வரவேற்றுள்ளனர். எனினும் தங்கள் குடும்ப நபர்களின் இறப்பை என்றும் ஈடுசெய்ய முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உயிரிழந்த விவசாயி ஒருவரின் குடும்பத்தினர் நேற்று கூறியதாவது:என் கணவரின் தியாகத்திற்கு கடைசியாக பலன் கிடைத்துவிட்டது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். இருந்தும், உயிரிழந்த விவசாயிகளின் இழப்புக்கு எதை கொடுத்தாலும் அதை ஈடு செய்ய இயலாது. இந்த முடிவை முன்பே எடுத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X