வீடு சிறியதாக இருந்தாலும் அது சொந்த வீடாக தான் இருக்க வேண்டும் நம்மில் பலர் ஆசைப்படுவது உண்டு. ஆனால், வீடு கட்ட ஆசைப்பட்டால் மட்டும் போதாது குறைந்த பட்ஜெட்டில் தரமாக கட்ட திட்டமிட வேண்டும். அதில் ஆர்ச் பவுண்டேஷன் உள்ளிட்ட சில தொழில்நுட்ப முறைகள் கட்டுமான செலவை குறைக்கிறது.
கட்டுமான செலவு குறைக்க கட்டுமான பொருட்களை முறையாக கையாள வேண்டும். வீடு கட்டும் பகுதிக்கு அருகில் கிடைக்கும் கட்டுமான பொருட்களை பயன்படுத்தினால் பெரியளவில் செலவை குறைக்கும். சிறிய வீடு கட்டினால் செலவாகாது என நினைக்கிறோம். ஆனால், வீட்டின் சதுர அடி குறைய குறைய வீடு கட்டும் சதுர அடிச் செலவு அதிகரிக்கும்.
கட்டுமான பொருட்களை பொறுத்த அளவில் ஸ்டெப்ளைஸ்டு கம்ப்ரஸ்ஸட் எர்த் ப்ளாக்ஸ், பிளை ஆஷ், ஜிப்சம் ஸ்டெபிப்லைஸ்டு மட் ப்ளாக்ஸ், பிளை ஆஷ் - லைம் ஜிப்சம் தயாரிப்புகள், கிளே ரெட் மட் பர்ன்ட் செங்கல், கான்கிரீட் பிளாக் போன்றவை பயன்படுத்தலாம். அஸ்திவாரம் எழுப்ப ஆகும் செலவு வீட்டின் மொத்தகட்டுமான செலவில் 10 - 15 சதவீதம் வரை ஆகும். எனவே, செம்மண், சாதா மண் நிலத்திற்கு 2 அடி அஸ்திவாரம் போதும்.
ஆர்ச் பவுண்டேஷன் என்பது பழங்கால முறை. இம்முறையில் அஸ்திவாரம் ஆழம் குறைக்கலாம். ஆனால், அஸ்திவார அடிப்பகுதியில் தாங்கு சுவர் எழுப்பி பலப்படுத்திட வேண்டும். ஏனென்றால் கட்டடஅழுத்தத்தைத் தாங்கும் அளவு அஸ்திவாரம் உறுதியுடன் இருக்க இது அவசியம். நில மட்டம் மேல் ஒரு அடி உயரம் 1:6 வீதம் சிமென்ட்டில் அடிப்பீடம் அமைக்க வேண்டும். சாதா பீடம் அமைக்க பயன்படும் 4க்கு 6 அங்குலம் அளவிலான ஸ்லாப் தவிர்த்து, செங்கல் பயன்படுத்தலாம். இம்முறை அஸ்திவார செலவை 35-50 சதவீதம் குறைக்கும்.
சுவர்களை பொறுத்தவரை எலிப்பொறி தொழில்நுட்பம் பயன்படுத்தலாம். இதனால் சுவர்களுக்கு உறுதி கூடும். கிராதி செங்கல் சுவருக்கு பயன்படுத்தலாம். வெப்பமான இடங்களில் வழக்கமான செங்கற்களில் சுவர் எழுப்புவதை விட கிராதி செங்கற்களை பயன்படுத்தும் போது செலவு குறையும். வீட்டுக்கு தேவையான வெளிச்சம், காற்று கிடைக்கும்.
கூரைக்கு வழக்கமாக ஆர்.சி.சி., ஸ்லாப்க்கு பதில் பெர்ரோ சிமென்ட் சேனல், ஜாக் ஆர்ச், பில்லர் ஸ்லாப் பயன்படுத்தலாம்.n பில்லர் ஸ்லாப் கூரை ஆர்.சி.சி.ஸ்லாப்களில் அதிக அளவுக்கு கான்கிரீட் வீணாகும். இந்த ஸ்லாப்களால் கட்டட சுமை கூடும். எனவே எடை குறைவான பொருட்களை கொண்டு கட்டட கூரை அமைத்தால் செலவுகள் குறையும். கட்டடத்தின் சுவர்கள் வழி அஸ்திவாரம் கடத்தும் எடையும் குறையும். பில்லர் ஸ்லாப் பயன்படுத்தி கூரை அமைக்கும் போது 15-25 சதவீதம் செலவு குறையும் என்கிறார்கள் பொறியாளர்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE