பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 500 பேர் டெங்குவால் பாதிப்பு: கட்டுப்படுத்த தீவிரம்!

Updated : நவ 20, 2021 | Added : நவ 20, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: ‛‛தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது,'' என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவுவது வழக்கம். டெங்கு
TN,Tamilnadu, DENGU, 500 MEMBERS, Vulnerability, தமிழகம், டெங்கு காய்ச்சல், 500 பேர் பாதிப்பு,

சென்னை: ‛‛தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது,'' என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.


latest tamil newsமக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவுவது வழக்கம். டெங்கு காய்ச்சல் கொசுக்கள் மூலம் பரவுகிறது. ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் நல்ல தண்ணீரில் இருந்துதான் இந்த வகை கொசுகள் உற்பத்தியாகிறது. இவை பகலிலேயே கடிக்கும்.

தமிழகம் முழுவதும் 500 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளது. மேலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


latest tamil news


அதன்பின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது: டெங்கு பரவலுக்கு அறிகுறி காய்ச்சல், குளிர், தலைவலி, வயிற்றுவலி, மூக்கு ஒழுகுதல் இருக்கும். கொசுக்கள் மூலம் பரவுவதால் கொசுக்களை கட்டுப்படுத்த அனைத்து பகுதியிலும் கொசு மருந்து தெளிக்கப்படும்.

அனைத்து வீடுகளுக்கும் பிளீச்சிங் பவுடர் சுமார் 500 கிராம் வழங்கப்படுகிறது. குப்பை கழிவுகளை அகற்றியதும் அந்த இடங்களில் தெளிக்க வேண்டும். சுகாதாரத்துறையினர், குடிநீர் வழங்கல்துறையுடன் இணைந்து செயல்படவும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் கலக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

குடியிருப்பு நலச்சங்கங்களும் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் தவறாமல் மருந்து தெளிக்க வேண்டும். சென்னையில் 200 வார்டுகளுக்கும் டெங்கு கட்டுப்படுத்தும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து தெளிக்கப்படுகிறது. டெங்கு மேலும் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-நவ-202115:56:23 IST Report Abuse
சம்பத் குமார் 1A). கொஞ்சம் இந்த சுகாதார துறை அமைச்சர் வேலை செய்கிறார். பரவாயில்லை. வாழ்த்துக்கள்.1). மக்கள் சுடு தண்ணீர் அருந்த வேண்டும்.2). மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.3). கொசு வலைகள் உபயோக்கிக வேண்டும்.4). அரசாங்கத்தை எதிர்பார்பதைவிட நம்மை நாமே தற்காத்து கொள்ள வேண்டும். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
20-நவ-202115:28:29 IST Report Abuse
venkatan தத்தமது கட்டிட அமைப்புக்களில் நன்னீர்,மழைநீர் தேங்குவதைத் தடுக்க திருவாளர் பொது சனம் முன்வரவேண்டும்.காலி பாட்டில்கள், பூஞ்சாடிகள், மொட்டை மாடிகள்,பழைய டயர்கள்,சீசாக்கள் இன்ன பிற மழைநீர் கலன்கள், தேக்கிகள்,உபயோகமில்லா தட்டுமுட்டுப்பொருட்கள் போன்றன பார்வையிடப்பட்டு நீர் வெளியேற வழிவகை/முறையாக அப்புறப்படுத்துதல் அவசியம்..காலி இளநீர் மொந்தைகள்,தேங்காய் சிரட்டைகள் குவிக்கப்பட்டால் அவைகள்கொசுக்களுக்கு வெகு சொகுசான இருப்பிடமாகும்.உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணியவேண்டும்.வர்தகநிறுவனங்கள்,கல்விசாலைகள் என எங்கும் எதிலும் கொசுத்தொல்லைகள்.மருந்தில்லா வியாதிக்கு வருமுன் காப்பது எளிது..
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
20-நவ-202114:20:24 IST Report Abuse
Kumar மழைநீர் வடிகாலுனு ஊர் முழுவதும் கொசு வளர்ப்பு திட்டம்ல‌ செய்து இருக்கிறார்கள். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X