35. பிரம்மாண்டமான பொதுக்கூட்டம்| Dinamalar

35. பிரம்மாண்டமான பொதுக்கூட்டம்

Added : நவ 20, 2021
Share
கோல்கட்டா காங்கிரஸ் மாநாட்டில் அளிக்கப்பட்ட பெரிய வரவேற்பைப் பார்த்து மிகப் பெரும் பணக்காரரான மோதிலால் நேரு அசந்து போனார். சீருடை அணிந்த இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட தொண்டர்கள், நேதாஜி அமைத்திருந்த தொண்டர் படையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட சைக்கிள் படைவீரர்கள் ஆகியோர் மோதிலால் நேருவின் முன்பும் பின்பும் அணிவகுத்துச் சென்றனர். காலாட்படை, குதிரைப்படை, அணிவகுத்து
35. பிரம்மாண்டமான பொதுக்கூட்டம்

கோல்கட்டா காங்கிரஸ் மாநாட்டில் அளிக்கப்பட்ட பெரிய வரவேற்பைப் பார்த்து மிகப் பெரும் பணக்காரரான மோதிலால் நேரு அசந்து போனார்.

சீருடை அணிந்த இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட தொண்டர்கள், நேதாஜி அமைத்திருந்த தொண்டர் படையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட சைக்கிள் படைவீரர்கள் ஆகியோர் மோதிலால் நேருவின் முன்பும் பின்பும் அணிவகுத்துச் சென்றனர். காலாட்படை, குதிரைப்படை, அணிவகுத்து வந்தனர். பல பிரமாண்டமான வரவேற்பு அமைக்கப்பட்டிருந்தன. பல வாத்தியங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சாலை முழுவதும் மலர்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேதாஜி ராணுவ உடையில் கம்பீரமாக நடந்து வந்த மாநாட்டை கோலாகலமாக நடத்தி காட்டினார்.நேதாஜி நடத்திய அந்தப் பேரணி அகில இந்திய காங்கிரஸ் இயக்கத்திற்கு அதிக உற்சாகத்தை கொடுத்தது என்று பத்திரிக்கைகள் பாராட்டி எழுதின.

(எழுத்துருவாக்கம்: ஆதலையூர் சூரியகுமார், மாநில செயலாளர், தேசிய சிந்தனைக் கழகம், தஞ்சாவூர்)

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X