பேராசிரியையிடம் 7 சவரன் செயின் பறிப்பு: கொள்ளையனை விரட்டிப் பிடித்த போலீஸ்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேராசிரியையிடம் 7 சவரன் செயின் பறிப்பு: கொள்ளையனை விரட்டிப் பிடித்த போலீஸ்

Added : நவ 20, 2021
Share
பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, கல்லுாரி பேராசிரியையிடம், 7 சவரன் செயினை பறித்து சென்ற திருடனை, போலீசார் விரட்டிப் பிடித்தனர்.பெரம்பலுார் மாவட்டம், பேரளி கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் சின்னசாமி மனைவி கனகாம்பாள், 30. இவர், பெரம்பலுார் அருகே சிறு வாச்சூரில் உள்ள ஸ்ரீசாரதா கலை அறிவியல் கல்லுாரியில் வேதியியல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று காலை, 10

பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, கல்லுாரி பேராசிரியையிடம், 7 சவரன் செயினை பறித்து சென்ற திருடனை, போலீசார் விரட்டிப் பிடித்தனர்.

பெரம்பலுார் மாவட்டம், பேரளி கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் சின்னசாமி மனைவி கனகாம்பாள், 30. இவர், பெரம்பலுார் அருகே சிறு வாச்சூரில் உள்ள ஸ்ரீசாரதா கலை அறிவியல் கல்லுாரியில் வேதியியல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று காலை, 10 மணியளவில் கல்லுாரிக்கு தனது ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கல்பாடி பிரிவு ரோடு அருகே சென்றபோது, இவரை பின்தொடர்ந்து ராயல் என்பீல்டு புல்லட்டில் வந்த வாலிபர், கனகாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த, ஏழு சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டார்.

கனகாம்பாள் தனது ஸ்கூட்டியில் திருடனை விரட்டி சென்றார். சிறுவாச்சூர் வளைவு பகுதி வரை சென்ற திருடன், வண்டியை திருப்பி சென்னை நோக்கி தப்பிச் சென்றார். இதுகுறித்து, கனகாம்பாள் சிறுவாச்சூரில் ரோந்து பணியில் இருந்த ஹைவே பேட்ரோல் போலீசாரிடம் தெரிவித்தார். அவர்கள் மங்கலமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மங்கலமேடு போலீசார் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே திருடனை மடக்கி பிடித்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

அவரிடம் போலீசார் விசாரித்ததில், தென்காசி மாவட்டம், கடையநல்லுாரைச் சேர்ந்த சையதுமசூத் மகன் சாகுல்ஹமீது, 26, என்பதும், இவர், இதேபோல் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. அவரிடமிருந்து, 7 சவரன் செயின் மற்றும் புல்லட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X