பயணிகளுக்கு மீண்டும் உணவு விற்பனை: ரயில்வே வாரியம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பயணிகளுக்கு மீண்டும் உணவு விற்பனை: ரயில்வே வாரியம்

Updated : நவ 20, 2021 | Added : நவ 20, 2021 | கருத்துகள் (2)
Share
சென்னை: ‛‛கொரோனா காரணமாக ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவுகள் நிறுத்தப்பட்ட நிலையில் தளர்வுகள் காரணமாக மீண்டும் உணவு வழங்கப்படும்,'' என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதைத் தொடர்ந்து ரயில்வே துறையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ரயில் பயணிகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள்
TRAIN, PASSENGERS, FOOD, SUPLY, RAILWAY BOARD, ரயில் பயணிகள், உணவு விற்பனை, துவக்கம், ரயில்வே வாரியம்

சென்னை: ‛‛கொரோனா காரணமாக ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவுகள் நிறுத்தப்பட்ட நிலையில் தளர்வுகள் காரணமாக மீண்டும் உணவு வழங்கப்படும்,'' என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதைத் தொடர்ந்து ரயில்வே துறையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ரயில் பயணிகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்வு செய்யப்பட்டுள்ளன. அனைத்து சிறப்பு ரயில்களும் வழக்கமான பெயரில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


புறநகர் மின்சார ரயில்களில் எந்த நேரமும் அனைத்து பயணிகளும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டது. நாடு முழுவதும் ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. நிறுத்தப்பட்டு இருந்த பயணிகள் ரயில் அனைத்தும் மீண்டும் இயக்கப்படுகின்றன.

கொரோனா காரணமாக ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சமைக்கப்பட்ட உணவு நிறுத்தப்பட்டிருந்தது. தொற்று பரவல் காரணமாக ரயில் பெட்டிகளில் உணவு தயாரிப்பது நிறுத்தப்பட்டது.

தற்போது அறிவிக்கப்பட்ட பல்வேறு தளர்வைத் தொடர்ந்து உணவு வழங்குவதற்கும் இருந்த தடை நீக்கப்பட்டது. இதனால் ரயில் பயணிகளுக்கு சமைக்கப்பட்ட உணவு மீண்டும் வழங்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.


latest tamil news


இதுகுறித்து இந்திய ரயில்வே உணவு, சுற்றுலா கழகத்துக்கு (ஐ.ஆர்.சி.டி.சி.,) ரயில்வே வாரியம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: கொரோனா கட்டுப்பாடு காரணமாக சமைக்கப்பட்ட உணவை ரயில்களில் வழங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது நிலைமை சீராகி வருவதால் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சமைக்கப்பட்ட உணவு விநியோக சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்.

ரயில்களில் பயணிக்கக் கூடிய பயணிகளுக்கு உடனடியாக சாப்பிடக்கூடிய உணவு (பார்ஸ்ட் புட்) விநியோக சேவையையும் ஐ.ஆர்.சி.டி.சி., தொடங்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X