சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாடு மீது மோதல்: டிரைவர் சாவு

Added : நவ 20, 2021
Share
Advertisement
நாகப்பட்டினம்: நாகை அடுத்த நாகூரைச்சேர்ந்தவர் ஜெகபர்சாதிக், 58. ஆட்டோ டிரைவர். இவர் நேற்று அதிகாலை தனது ஆட்டோவில் வேளாங்கண்ணிக்கு சென்று பயணிகளை இறக்கி விட்டு விட்டு மீண்டும் நாகூர் வந்துள்ளார். நாகை கலெக்டர் அலுவலகம் அருகே பால்பண்ணைச்சேரி என்ற இடத்தில் சாலையில் படுத்து இருந்த மாடு திடீரென எழுந்து சாலையின் குறுக்கே ஓடியுள்ளது. ஜெகபர்சாதிக் ஆட்டோவை நிறுத்த முயற்சி

நாகப்பட்டினம்: நாகை அடுத்த நாகூரைச்சேர்ந்தவர் ஜெகபர்சாதிக், 58. ஆட்டோ டிரைவர். இவர் நேற்று அதிகாலை தனது ஆட்டோவில் வேளாங்கண்ணிக்கு சென்று பயணிகளை இறக்கி விட்டு விட்டு மீண்டும் நாகூர் வந்துள்ளார். நாகை கலெக்டர் அலுவலகம் அருகே பால்பண்ணைச்சேரி என்ற இடத்தில் சாலையில் படுத்து இருந்த மாடு திடீரென எழுந்து சாலையின் குறுக்கே ஓடியுள்ளது.

ஜெகபர்சாதிக் ஆட்டோவை நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் ஆட்டோ மாடு மீது மோதி சாலையில் திரும்பியது. அப்போது சென்னையில் இருந்து நாகைக்கு வந்த தனியார் பஸ், ஆட்டோ மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெகபர்சாதிக் படுகாயமடைந்து இறந்தார். நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X