பொது செய்தி

இந்தியா

பார்லி., நோக்கி வரும் 29ல் டிராக்டர் பேரணி: விவசாய சங்கம் அறிவிப்பு

Updated : நவ 20, 2021 | Added : நவ 20, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
டில்லி: ‛‛தங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை முன்வைத்து வரும் 29ம் தேதி பார்லிமென்ட் நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்படும்,'' என்று டில்லியில் போராடி வரும் விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடிவு செய்திருப்பதாகவும், வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் இதற்கான நடைமுறைகள் தொடங்கும் என்றும், வேளாண்
DELHI, PALIMENT, TRACTOR, RALLY, AGRI, FORMER, டில்லி பார்லிமென்ட், நோக்கி, வரும் 29ல் டிராக்டர் பேரணி, விவசாய சங்கம், அறிவிப்பு,

டில்லி: ‛‛தங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை முன்வைத்து வரும் 29ம் தேதி பார்லிமென்ட் நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்படும்,'' என்று டில்லியில் போராடி வரும் விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடிவு செய்திருப்பதாகவும், வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் இதற்கான நடைமுறைகள் தொடங்கும் என்றும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


latest tamil news


மோடியின் அறிவிப்பையடுத்து விவசாயிகள் உற்சாகமாக கொண்டாடினர். போராட்டக்களங்களில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். சிங்கு எல்லையில் போராட்டம் நடத்திய விவசாய சங்க நிர்வாகிகள் போராட்டத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்ப முடிவு செய்துள்ளனர்.

எனினும், ஒருசில விவசாய சங்கத்தினர் தொடர்ந்து அடம் பிடித்து அங்கு முகாமிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. ஓராண்டாக தங்களின் இல்லமாக மாறிய போராட்ட களங்கள் காலி செய்யப்படாது என விவசாயிகள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக கிராந்திகரி விவசாய சங்க தலைவர் தர்சன் பால் சிங் கூறியதாவது: வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வருகின்ற பார்லிமென்ட் கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை முறைப்படி ரத்து செய்ய வேண்டும். போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகள் நினைவாக நினைவுச்சின்னம் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும். இதை வலியுறுத்தி நாங்கள் வருகிற 29ம் தேதி பார்லிமென்ட் நோக்கி டிராக்டர் பேரணி நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
21-நவ-202109:10:41 IST Report Abuse
 Muruga Vel இந்த நாலஞ்சு விவசாய சங்க தலைவருங்க ... கமிட்டியில் போட்டு ...விவசாயி பிரச்சனைகளுக்கு என்ன செலவாகும் ..பணம் எப்படி வரும்னு ...அறிக்கை விட சொல்லணும்
Rate this:
Cancel
21-நவ-202108:19:24 IST Report Abuse
சங்கி இனியும் போராட்டம் எனக்கூறி நாட்டின் பாதுகாப்பிற்கு இன்னல் செய்ய நினைக்கும் இவர்களுக்கு பொதுமக்கள் தான் தக்க பதில் கொடுக்கவேண்டும்.....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-நவ-202106:48:48 IST Report Abuse
J.V. Iyer உடனே இவர்களை கைதுசெய்து சிறையில் அடைக்கவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X