அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ., சீட் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: அமைச்சரின் 'மாஜி' உதவியாளர் கைது

Added : நவ 20, 2021
Share
Advertisement
சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் புவனேஸ்குமார் 29; பா.ஜ., பிரமுகரான இவர், சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில், கடந்த ஜூலையில் புகார் ஒன்றை அளித்தார்.அதில், 'நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ஆரணி தொகுதியில் என் சித்தப்பா மகள் வசந்தியை நிறுத்த விரும்பினோம். சென்னையைச் சேர்ந்த விஜயராமன் என்பவர் மூலம், மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டியின்
எம்.எல்.ஏ., சீட் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: அமைச்சரின் 'மாஜி' உதவியாளர் கைது

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் புவனேஸ்குமார் 29; பா.ஜ., பிரமுகரான இவர், சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில், கடந்த ஜூலையில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், 'நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ஆரணி தொகுதியில் என் சித்தப்பா மகள் வசந்தியை நிறுத்த விரும்பினோம். சென்னையைச் சேர்ந்த விஜயராமன் என்பவர் மூலம், மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டியின் உதவியாளர் நரோத்தமனை, சென்னையில் சந்தித்தேன்.'அவர், எம்.எல்.ஏ., சீட் வாங்கித் தருவதாகக் கூறி, 50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்தார். பணத்தை திருப்பிக் கேட்டால், அவரது தந்தை சிட்டிபாபுவுடன் சேர்ந்து மிரட்டி வருகிறார்' என, குறிப்பிட்டிருந்தார்.

புகாரின்படி, பாண்டிபஜார் போலீசார் நரோத்தமன், 35, சிட்டிபாபு, 66, உள்ளிட்ட நால்வரை தேடி வந்தனர். இதற்கிடையில், உதவியாளர் பொறுப்பில் இருந்து நரோத்தமன் நீக்கப்பட்டார். குற்றவாளிகள் ஐதராபாதில் இருப்பதாக தகவல் கிடைத்து, அங்கு விரைந்த பாண்டிபஜார் தனிப்படை போலீசார், நரோத்தமன், சிட்டிபாபுவை, நேற்று மாலை கைது செய்து, சென்னை அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X