இறை இடம் இவர்| Dinamalar

இறை இடம் இவர்

Updated : நவ 20, 2021 | Added : நவ 20, 2021
Share
தெய்வத் திருமேனிகளின் அதியற்புதத்தை எழிலோவியங்களாக தந்திருக்கிறார் பெரியவர் ஓவியர் மணிவேல்.அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள்,சாரசரியான நமக்கு புரிவதற்காகப் பற்பல வடிவங்கை எடுக்கிறது இத்தகைய தெய்வத் திருவடிவங்களை,திருக்கோயில்களில் எழுந்தருளி பூவுலகிற்கு அருள் சொரியும் அழகு வடிவங்களை,மேலும் எளிமைப்படுத்தித்latest tamil news


தெய்வத் திருமேனிகளின் அதியற்புதத்தை எழிலோவியங்களாக தந்திருக்கிறார் பெரியவர் ஓவியர் மணிவேல்.அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள்,சாரசரியான நமக்கு புரிவதற்காகப் பற்பல வடிவங்கை எடுக்கிறது இத்தகைய தெய்வத் திருவடிவங்களை,திருக்கோயில்களில் எழுந்தருளி பூவுலகிற்கு அருள் சொரியும் அழகு வடிவங்களை,மேலும் எளிமைப்படுத்தித் தந்திருக்கிறார் ஓவியர் மணிவேல்.


latest tamil news


கடவுள் சந்நிதானத்தில் போய் நின்று,உள்ளிருக்கும் இறைவடிவை முழுமையாகக் கண்டுவிடுவது என்பது சாத்தியமா?எவ்வளவுதான் உற்று உற்று பார்த்தாலும் எத்தனைதான் கால் கடுக்க நின்று கவனித்தாலும்,எப்படித்தான் சாய்த்துச் சாய்த்து அவதானிக்க முற்பட்டாலும்,ஒரு துளியேனும் பருகிட முடியுமா?ஆயின் மனமாரக் காணும் வகையில்,பார்த்து பரவசப்படும் வகையில்,பார்த்து பார்த்து தியானிக்கும் வகையில் மணிவேல் தந்திருக்கிறார்.


latest tamil news


Advertisement

அடி முடி காண இயலாத அருப்பெருஞ்சோதி,சுடராகி,மலையாகி வடிவாகிக் குளிர்ந்து காட்சித தந்ததாம்.அதே அருட்பெருஞ்சோதி ,சிற்பச் சுடராகி,ஓவிய மலராகி,உளிக்குள் உயிராகி,துாரிகைக்குள் துளிராகி,கண்ணுக்குள் கருவாக இதோ இப்போதும் வருகிறது,வணங்கி வரவேற்போம்;உள்ளத்துள் கொலு வைப்போம் என்று டாக்டர் சுதா சேஷய்யனின் பாராட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஓவியர் மணிவேலுவின் ஓவிய கண்காட்சிசென்னையில் நடைபெற்று வருகிறது.


latest tamil news


காஞ்சி காமாட்சி,மதுரை மீனாட்சி,ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர்,மைசூர் சாமுண்டீஸ்வரி என்று பிரபலமான பல்வேறு கோவில் மூலவர்களின் ஒவியங்கள் தத்ரூபமாக காட்சி தரும் ஒவியக் கண்காட்சி சென்னை அம்பத்துார் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள டாட் ஸ்கூல் ஆப் டிசைன் கல்வி வளாகத்தில் இடம் பெற்றுள்ளது.


latest tamil news


கடந்த ஐம்பது வருடங்களாக தெய்வீக ஒவியங்களை வரையும் ஒவியர் ஆ.மணிவேலுவிற்கு தற்போது 80 வயதாகிறது.சென்னையில் வசிக்கிறார்.சிறு வயதில் இருந்தே சிற்பக்கலையை கற்றவருக்கு ஒவியக்கலையும் ஒரே சேர வந்தது கூடவே ஆன்மீகத்தில் அளவில்லாத நாட்டம் ஏற்பட்டது


latest tamil news


இவரது விநாயகர் ஒவியம் முதன் முதலாக ‛கலைமகள்' தீபாவளி மலரில் வந்தது .ஒவியத்தை பார்க்கும் போது விநாயகரை கர்ப்பககிரகத்தில் வைத்து பார்ப்பது போல தத்ரூபமாக இருப்பதாக பலரும் பாராட்டினர், பாராட்டியவர்களில் ‛இதயம் பேசுகிறது' மணியனும் ஒருவர். அவர் ‛ஞான பூமி' என்ற மாத இதழுக்கு மாதம் ஒரு ஒவியம் வரைந்து கொடுக்க சொன்னார்.


latest tamil news


அப்படி ஆரம்பித்ததுதான் பிரபலமான கோவில்களின் மூலவர் ஒவியங்கள்.கோவிலில் முறையான அனுமதி பெற்று ஒவியம் வரைவார். மூலவரை போட்டோ எடுக்கக்கூடாது என்பதால் கூட்டம் இல்லாத நேரத்தில் மூலவரை அலங்காரம் செய்த நிலையிலும் அலங்காரம் செய்யாத நிலையிலும் பலமணி நேரம் உட்கார்ந்து பார்த்து ‛அவுட் லைன்'வரைந்து கொள்வார்.மூலவருக்கு போடக்கூடிய ஆபரணங்களையம் அதே போல வரைந்து கொள்வார்.இதற்கே இரண்டு மூன்று நாட்களாகும்.
பின்னர் வீட்டிற்கு வந்து ஒவியத்தை வரைய ஆரம்பித்தால் அந்த ஒவியம் அதன் தன்மையைப் பொறுத்து இருபது நாள் வரையிலும் கூட எடுத்துக் கொள்ளும் வரைந்த ஒவியத்தை பத்திரிகை அலுவலகத்திற்கு கொடுத்து விடுவார் பிறகு அடுத்த மாத பத்திரிகை தேவைக்கான ஒவியத்தை வரைய அடுத்த ஊர் அடுத்த கோவில் என்று அவரது ஓவியப் பயணம் பல வருடங்களாக தொடர்ந்தது.
இதுவரை ஐநுாறுக்கும் அதிகமான கோவில்களில் ஒவியங்கள் வரைந்திருப்பேன் எந்த கோவிலிலும் எந்த தெய்வத்தை வரையவும் இதுவரை எந்த தடங்கலும் வந்ததேயில்லை காரணம் இறைவன் தன்னை வரை என்னை தேர்ந்து எடுத்துக் கொண்டான் என்கிறார் மணிவேலு பெருமிதமாக.
வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட ஒவிய கருவிகள் மற்றும் வாட்டர் கலர் வண்ணங்களைத்தான் ஒவியம் வரைய அதிகம் பயன்படுத்துவேன் எத்தனை ஆண்டுகளானாலும் ஒவியம் மங்காது.புத்தகத்தில் வந்த ஒவியத்தை பார்த்துவிட்டு ஆந்திரா,கேரளா,கர்நாடகா மாநில கோவில்களில் இருந்தெல்லாம் அழைப்பு வந்தது அங்கேயும் போய் வரைந்து வந்தேன்.
கடவுளின் ஒவியங்களை தவிர வேறு ஒவியங்களை வரைவதில்லை,பத்திரிகையில் வந்த ஒவியத்தைப் பார்த்துவிட்டு அதே போல ஒரிஜினலாக தங்களுக்கும் வேண்டும் என்று கேட்டுவரும் வாசகர்களுக்கு ஒவியம் வரைந்து கொடுப்பேன் அப்படி நுாற்றுக்கணக்கில் வரைந்த ஒவியம் காஞ்சி காமாட்சியாகும்.
எனது ஒவியங்கள் பலரது வீட்டின் பூஜை அறையை அலங்கரித்து கொண்டிருக்கிறது பெரிய நிறுவனங்களின் வரவேற்பறையில் வீற்றிருக்கும், காலண்டராகவும் வந்துள்ளது என்பதெல்லாம் இறைவன் எனக்களித்த பெருமை.
ஒவியம் வரைய ஆரம்பகாலத்தில் ஏழாயிரம் ரூபாய் வரை செலவானது கடைசியாக சில மாதங்களுக்கு முன் நான் வரைந்த திருவண்ணாமலையார் ஒவியத்தை வரைய 50 ஆயிரம் ரூபாய் செலவானது. செலவுகளை எல்லாம் தாண்டி எனக்கான சன்மானத்தை பல நிறுவனங்கள் நிறையவே வழங்கின.தனி நபர்கள் தங்கள் குல தெய்வங்களை வரைந்து கொடுக்கச் சொல்லியும் வாங்கியுள்ளனர்.
வயது முதிர்வு காரணமாக ஓவியர் மணிவேலுவால் கோர்வையாக ஒரு விஷயத்தை நினைவில் வைத்து பேசமுடியவில்லை என்பதால் கண்காட்சியை பார்க்க வரும் பார்வையாளர்களிடம் ஒவியர் மணிவேலுவின் குரலாக இருந்து அவரது மகன் ஆறுமுகம் விளக்கம் தருகிறார்.
மூலவரின் முன்னால் ஒரு சில வினாடிகளே நிற்க முடியாத பக்தர்கள் பலர் இருக்கையில் பல மணி நேரம் மூலவரின் முன் நிற்கும் பாக்கியத்தை அளித்த அத்தனை சுவாமி, அம்பாள் தெய்வங்களையும் என் நெஞ்சில் நிறுத்தி நன்றி கூறி வணங்குகிறேன் என்று சொல்லும் ஒவியர் மணிவேலுவின் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஒவியங்களை கண்காட்சியாக வைப்பதற்கு ‛டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' மற்றும் ‛தினமலர்' நாளிதழ் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
‛இறை இடம் இவர்' என்ற தலைப்பிலான இந்த ஓவிய கண்காட்சி வரும் டிசம்பர் மாதம் 14 ந்தேதி வரை நடைபெறுகிறது.கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஒவியங்கள் விற்பனைக்கும் உண்டு பார்வையாளர்கள் அனுமதி நேரம் பகல் 11 மணியில் இருந்து மாலை 5 மணிவரை அனுமதி இலவசம். தொடர்புக்கு 95000 12166.
-எல்.முருகராஜ்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X