கப்பலில் கடற்கொள்ளையர்

Added : நவ 20, 2021
Advertisement
கோவை வித்யா நிகேதன் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் ரித்விக் பாலா. ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் வசித்து வருகிறார். 12 வயதே ஆன இந்த மாணவர், (Adventures of Scottish and the deadly dragon) என்ற ஆங்கில நாவலை எழுதி இருக்கிறார்.ரித்விக் பாலாவிடம் பேசியபோது... எனக்கு கதைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். ஹாரிபாட்டர், இங்கிலீஷ் சைன்ஸ் பிக்ஷன்ஸ் மற்றும் ராஜாஜி, ஆங்கிலத்தில் எழுதிய ராமாயணம் என, நிறைய
 கப்பலில் கடற்கொள்ளையர்

கோவை வித்யா நிகேதன் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் ரித்விக் பாலா. ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் வசித்து வருகிறார். 12 வயதே ஆன இந்த மாணவர், (Adventures of Scottish and the deadly dragon) என்ற ஆங்கில நாவலை எழுதி இருக்கிறார்.ரித்விக் பாலாவிடம் பேசியபோது... எனக்கு கதைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். ஹாரிபாட்டர், இங்கிலீஷ் சைன்ஸ் பிக்ஷன்ஸ் மற்றும் ராஜாஜி, ஆங்கிலத்தில் எழுதிய ராமாயணம் என, நிறைய புத்தகங்கள் படித்தேன். எனக்கும் இது போன்ற கதைகள் எழுத வேண்டும் என ஆசை ஏற்பட்டது.அப்போதுதான் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய, 'எழுதும் கலை' என்ற புத்தகத்தை என் அப்பா வாங்கி கொடுத்தார். அதில் கதை எப்படி எழுதுவது என்பது குறித்து விளக்கமாக சொல்லி இருக்கிறார்.கதை எழுதும்போது வெறும் கற்பனையாக மட்டும் இல்லாமல், உண்மை தகவல்களையும் சேர்த்து எழுத வேண்டும் என, பல விஷயங்களை அதில்
சொல்லி இருக்கிறார்.குறிப்பாக, கப்பல் வேகமாக போகிறது என்று எழுதினால் அது எத்தனை கி.மீ., வேகத்தில் செல்கிறது, கப்பலின் எடை மற்றும் கொள்ளளவு எவ்வளவு என்ற தகவல்கள் இருந்தால், படிக்கும் வாசகர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என குறிப்பிடுகிறார். அவரது பனி மனிதன், வெள்ளி நிலம் மற்றும் வெள்ளை யானை ஆகிய புத்தகங்களை படித்த போது எனக்கு கதை எழுதும் ஆர்வம் அதிகரித்தது.
அதன் பிறகுதான், 'ஸ்காட்லாண்ட் கடல் கொள்ளையர்களின் சாகசங்கள்' (Adventures of Scottish and the deadly dragon) என்ற இந்த இங்கிலிஷ் திரில்லர் நாவலை எழுதி இருக்கிறேன்.கடல் கொள்ளையர்கள் எப்படி கப்பலில் கொள்ளை அடிக்கிறார்கள், அவர்களை கடல் படையினர் எப்படி துரத்திப் பிடிக்கின்றனர் என்பது பற்றி எழுதி இருக்கிறேன். இதை படித்தால் கடலில் மறைந்து இருக்கும் பல மர்மங்களை தெரிந்து கொள்ளலாம்.படிச்சு பார்த்துட்டு சொல்றோம் ரித்விக்! கப்பல் வேகமாக போகிறது என்று எழுதினால் அது எத்தனை கி.மீ., வேகத்தில் செல்கிறது, கப்பலின் எடை மற்றும் கொள்ளளவு எவ்வளவு என்ற தகவல்கள் இருந்தால், படிக்கும் வாசகர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என குறிப்பிடுகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X