எழுத்தாளர்கள் எழுத்தை நம்பி வாழமுடியாது!

Added : நவ 20, 2021
Share
Advertisement
கோவையில் வசந்தவாசல் கவிமன்றம் என்ற அமைப்பை, 20 ஆண்டுகளாக நடத்தி வருபவர் கவிஞர் கோவை கோகுலன். இந்த கவிமன்றத்தில் பங்கேற்று கவிதை பாடும் இளங்கவிஞர்களின் கவிதைகளை நுாலாக தொகுத்து ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறார்.இதுவரை, 17 தொகுப்பு நுால்களை வெளிட்டு இருக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக இலக்கிய நிகழ்ச்சிகள் நடக்கவில்லை.இந்த ஊரடங்கு காலத்தில்
 எழுத்தாளர்கள்  எழுத்தை நம்பி வாழமுடியாது!

கோவையில் வசந்தவாசல் கவிமன்றம் என்ற அமைப்பை, 20 ஆண்டுகளாக நடத்தி வருபவர் கவிஞர் கோவை கோகுலன். இந்த கவிமன்றத்தில் பங்கேற்று கவிதை பாடும் இளங்கவிஞர்களின் கவிதைகளை நுாலாக தொகுத்து ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறார்.இதுவரை, 17 தொகுப்பு நுால்களை வெளிட்டு இருக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக இலக்கிய நிகழ்ச்சிகள் நடக்கவில்லை.இந்த ஊரடங்கு காலத்தில் இவர் வீட்டில் இருந்த போது, சொந்தமாக 'வெளிச்சத்தின் நிழல்' என்ற சிறுகதை தொகுப்பையும், 'தாய் மனம்' என்ற கவிதை தொகுப்பையும் எழுதி நுாலாக்கி இருக்கிறார்.அவரிடம் பேசிய போது...கோவையை தொழில் நகரம் என்று சொல்வது போல், இலக்கிய நகரம் என்றும் சொல்லலாம். அந்த அளவுக்கு இங்கு கவிஞர்கள், எழுத்தாளர்கள் எண்ணிக்கை அதிகம்.இங்கு 10க்கும் மேற்பட்ட இலக்கிய அமைப்புகள் செயல்படுகின்றன. வாரம்தோறும் தவறாமல் இலக்கிய சந்திப்பு கூட்டங்கள் நடக்கின்றன. இளம் படைப்பாளர்கள் பலர் உற்சாகமாக எழுதி வருகின்றனர்.வசந்த வாசல் கவிமன்றத்தை பொறுத்தவரை, இளம் படைப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்களை வளர்ப்பதுதான் எங்கள் நோக்கம்.நான் ஏற்கனவே 'விடியல்' என்ற சிறுகதை தொகுப்பை வெளியிட்டு இருக்கிறேன். இப்போது ஊடங்கு காலத்தில் வீட்டில் இருந்த போது, இந்த இரண்டு நுால்களையும் எழுதினேன்.எழுத்தாளர்கள் எழுத்தை நம்பி வாழமுடியாது. அதற்கான சூழல் இங்கு இல்லை.ஆத்ம திருப்திக்காகதான் பலர் எழுதுகின்றனர். கலை இலக்கியம் என்பது நம் வாழ்க்கையோடு கலந்த ஒன்றாக, சங்க காலத்தில் இருந்து தொடர்ந்து வருகிறது. அதன் தொடர்ச்சி விட்டுப்போகாமல், எழுதுவதை நாம் தொடர வேண்டும்.இவ்வாறு கூறுகிறார் கோகுலன்.தொடர்ந்து வாசிப்போம்...நமது மனத்திருப்திக்காகவாவது எழுதுவோம்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X