ஐந்தறிவு வாடுது... ஆறறிவு தேடுது! நாய்களுக்கும் தேவை... சமரசம் உலாவும் இடம்!

Added : நவ 20, 2021
Share
Advertisement
மிருகமென்ற கேவலம் வேண்டாம் மிஞ்சிவிட்டேன் உன்னை விசுவாசத்தில் ஐந்தறிவு ஜீவன் நான்ஆறறிவு உன்னை வென்று விட்டேன்... நாயைப் பற்றி நன்றியோடு ஒருவர் இணையத்தில் எழுதியிருந்த கவிதை. விசுவாசத்தில் மட்டுமில்லை; அன்பிலும் அது மனிதர்களை மிஞ்சக்கூடியது என்பதை, கோவையில் காரில் அடிபட்டு இறந்து போன தன் நாய்க்குட்டியை எடுத்து, மடியில் போட்டுக்கொண்டு, நடுரோட்டில் உட்கார்ந்து,
 ஐந்தறிவு வாடுது... ஆறறிவு தேடுது!  நாய்களுக்கும் தேவை...  சமரசம் உலாவும் இடம்!

மிருகமென்ற கேவலம் வேண்டாம் மிஞ்சிவிட்டேன் உன்னை விசுவாசத்தில் ஐந்தறிவு ஜீவன் நான்ஆறறிவு உன்னை வென்று விட்டேன்... நாயைப் பற்றி நன்றியோடு ஒருவர் இணையத்தில் எழுதியிருந்த கவிதை.
விசுவாசத்தில் மட்டுமில்லை; அன்பிலும் அது மனிதர்களை மிஞ்சக்கூடியது என்பதை, கோவையில் காரில் அடிபட்டு இறந்து போன தன் நாய்க்குட்டியை எடுத்து, மடியில் போட்டுக்கொண்டு, நடுரோட்டில் உட்கார்ந்து, ''அய்யோ! தங்கமே என்னை விட்டுட்டு இப்பிடி அநியாயமாப் போயிட்டியே!'' என்று அழுத பெண்ணின் கண்ணீர் சொன்னது.நாயையும், பூனையையும் தன் குடும்பத்தில் ஒருவராய் நினைத்து நேசிக்கிற மனிதர்களுக்கு மட்டுமே, அவையும் அன்பைப் பகிரும் உயிர்கள் என்பதை உணர முடியும்.மேலை நாடுகளில் செல்லப்பிராணிகள் இறந்து விட்டால், அவற்றை வளர்ப்பவர்களுக்கு இரண்டு நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்திருக்கிறது கொலம்பியா அரசு. நம் ஊரில் விபத்தில் அடிபட்டு இறக்கும் தெருநாய்களை எடுத்து எறிவதற்கோ, புதைப்பதற்கோ கூட எந்த வழிமுறையும் இல்லை.விபத்தில் அவை அடிபட்டாலோ, திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டாலோ உடனே ஓடோடிப் போய் பார்ப்பதற்கு, போதிய மருத்துவமனைகளும் கூட இங்கில்லை.அதற்கென்று ஆம்புலன்ஸ் வசதிகளும் இல்லை. வீதியில் அடிபட்டுக் கிடக்கும் மனிதர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவே மனமில்லாதவர்கள், நாயை எடுத்துச் செல்ல வாகனத்தில் எப்படி இடம் தருவார்கள்...?ஆந்திராவில் 'விலங்குகளுக்கான பிரத்யேக ஆம்புலன்ஸ் சேவை'யை துவக்கியிருக்கிறார், அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. இணையத்தில் இதயம் திறந்து வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள்.உ.பி.யில் கூட கால்நடைகளுக்கென தனி ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டுள்ளது. நம்மூரில்தான், இதுபோன்ற எந்த வசதிகளுமே இல்லை. அதையும் விடக்கொடுமை, கோவை போன்ற நகரங்களில், செல்லப்பிராணிகள் இறந்தால் அவற்றைப் புதைப்பதற்கென்று தனி இடம் ஏதுமில்லை. சமீபத்தில் சென்னை வெலிங்டன் கார்ப்பரேஷன் பவுண்டேஷனும், ப்ளூ கிராஸ் அமைப்பும் இணைந்து, விலங்குகளுக்கென்றே சென்னையில் தனி மயானம் அமைத்துள்ளனர். மயானத்தை சமரசம் உலவும் இடம் என்பார்கள். அந்த சமரசம், ஐந்தறிவு ஜீவன்களுக்கும் கிடைக்க வேண்டும்.கோவையிலும் பல ஆயிரம் வீடுகளில், நாய்களும், பூனைகளும் செல்லப் பிராணிகளாக வளர்க்கப் படுகின்றன. இங்கேயும் அதற்கென்று ஒரு மயானத்தை அமைக்க ஓரிடத்தை ஒதுக்கினால், கோவை மாநகராட்சியை கொண்டாடுவார்கள் இவர்கள்.ஏனெனில்...நாய்களும் உயிர்கள்தான்...நாய்கள் மட்டுமில்லை; நாய்களை நேசிப்போரும் நன்றியுடையோர்தான்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X