தமிழ்நாடு

மீட்கப்படும் குழந்தைக்கு வரவேற்பு தத்து மையம்: மாவட்டந்தோறும் அமைக்க உத்தரவு

Added : நவ 20, 2021
Share
Advertisement
திருப்பூர்: மீட்கப்படும் குழந்தைகளை தற்காலிகமாக பராமரிக்கும் வரவேற்பு மையம் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சமூகநலத்துறையில், குழந்தைகள் பாதுகாப்புக்கு தனி அமைப்பு உருவாகி, செயல்படுகிறது. குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம், வன்கொடுமை, பாலியல் தொந்தரவு, பெற்றோரை இழந்த குழந்தைகள் என, பல்வேறு வகையில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, குழந்தைகள் பாதுகாப்பு

திருப்பூர்: மீட்கப்படும் குழந்தைகளை தற்காலிகமாக பராமரிக்கும் வரவேற்பு மையம் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சமூகநலத்துறையில், குழந்தைகள் பாதுகாப்புக்கு தனி அமைப்பு உருவாகி, செயல்படுகிறது. குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம், வன்கொடுமை, பாலியல் தொந்தரவு, பெற்றோரை இழந்த குழந்தைகள் என, பல்வேறு வகையில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆதரவு அளித்து, பாதுகாக்கிறது.'சைல்டு லைன்' கட்டணமில்லாத இணைப்பான, '1098' என்ற எண்ணுக்கு வரும் தகவல் அடிப்படையில், குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர், குழந்தைகளை மீட்கின்றனர்.மீட்கப்படும் குழந்தைகளை, காப்பகத்தில் சேர்க்காமல், சில நாட்கள், தற்காலிகமாக வரவேற்பு மையத்தில் வைத்து கூடுதல் கவனம் செலுத்தி பராமரிக்கப்பட வேண்டும்.மாவட்டம் தோறும், வரவேற்பு மையங்கள் இருக்க வேண்டும். ஆனால், திருப்பூர் உட்பட, புதிய மாவட்டங்களில், வரவேற்பு மையங்கள் இல்லை. குழந்தைகள் மனநிலை பாதிக்காமல் இருக்க, மாவட்டம் தோறும் வரவேற்பு மையங்கள் அமைக்க வேண்டுமென, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிஷன் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, சமூகநலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆதரவற்ற நிலையில் மீட்கப்படும் குழந்தைகள் உட்பட, மாவட்ட பாதுகாப்பு குழுவினர் மீட்கும் குழந்தைகளை, சில நாட்கள் வரை, தற்காலிக வரவேற்பு மையத்தில் வைத்திருக்க வேண்டும். சில மாவட்டங்களில் வரவேற்பு மையம், தத்து மையங்கள் இல்லை.இந்த நிதியாண்டுக்குள், பாதுகாப்பான கட்டடத்தை தேர்வு செய்து, வரவேற்பு மையம் மற்றும் தத்து மையம் துவங்கப்பட வேண்டுமென, தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X