தொலை துார கல்வி பயிலும் மாணவருக்கு டிச., 20ல் தேர்வு | Dinamalar

தொலை துார கல்வி பயிலும் மாணவருக்கு டிச., 20ல் தேர்வு 

Added : நவ 20, 2021
Share
கோவை: தொலைநிலை கல்வி பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகள், டிச., 20 ம் தேதி துவங்குகிறது என பாரதியார் பல்கலை அறிவுறுத்தியுள்ளது.பாரதியார் பல்கலையின் தொலை துார கல்வி வாயிலாக, 25 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். கொரோனா காரணமாக கடந்தாண்டு தேர்வு நடத்தப்படவில்லை. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் ஆன்லைன் வாயிலாக தேர்வுகள் நடத்தப்பட்டன.இந்நிலையில்,

கோவை: தொலைநிலை கல்வி பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகள், டிச., 20 ம் தேதி துவங்குகிறது என பாரதியார் பல்கலை அறிவுறுத்தியுள்ளது.பாரதியார் பல்கலையின் தொலை துார கல்வி வாயிலாக, 25 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். கொரோனா காரணமாக கடந்தாண்டு தேர்வு நடத்தப்படவில்லை. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் ஆன்லைன் வாயிலாக தேர்வுகள் நடத்தப்பட்டன.இந்நிலையில், நடப்பாண்டுக்கான தேர்வுகள் வரும், டிச., 20 ம் தேதி நடக்க உள்ளது.மாணவர்கள் ஆன்லைன் மூலம் வரும், 26 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பாரதியார் பல்கலை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து, பாரதியார் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) வீரராகவன் கூறியதாவது:நடப்பாண்டுக்கான தேர்வுகள், டிச., 20 ல் நடக்க உள்ளன. விண்ணப்பம் ஆன்லைனில் அனுப்பலாம். தேர்வு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம், ஹால்டிக்கெட்டையும் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். வரும், 26 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேவைப்பட்டால், ஓரிரு நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்படும்.இவ்வாறு, வீரராகவன் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X