தமிழ்நாடு

வாலாங்குளம் உபரி நீர் கட்டமைப்பை மாற்ற திட்டம்: மதிப்பீடு தயாரிக்கும் பணியில் மாநகராட்சி

Added : நவ 20, 2021
Share
Advertisement
கோவை: வாலாங்குளத்தில் இருந்து உபரி நீர் செல்லும் பகுதி மற்றும் மசால் லே-அவுட் வழியாக சங்கனுார் பள்ளத்தை இணைக்கும் மழை நீர் வடிகால் புதுப்பிக்க, விரிவான திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடு தயாரிக்கும் பணியில், மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.உக்கடம் பெரிய குளத்தின் வால் பகுதியே வாலாங்குளம். பருவ மழை பொய்த்த காலத்தில், நீர் நிலைகள் தண்ணீரின்றி வறண்டு கிடந்தன. அச்சமயத்தில்
 வாலாங்குளம் உபரி நீர் கட்டமைப்பை மாற்ற திட்டம்:  மதிப்பீடு தயாரிக்கும் பணியில் மாநகராட்சி



கோவை: வாலாங்குளத்தில் இருந்து உபரி நீர் செல்லும் பகுதி மற்றும் மசால் லே-அவுட் வழியாக சங்கனுார் பள்ளத்தை இணைக்கும் மழை நீர் வடிகால் புதுப்பிக்க, விரிவான திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடு தயாரிக்கும் பணியில், மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.உக்கடம் பெரிய குளத்தின் வால் பகுதியே வாலாங்குளம். பருவ மழை பொய்த்த காலத்தில், நீர் நிலைகள் தண்ணீரின்றி வறண்டு கிடந்தன. அச்சமயத்தில் குளத்தின் ஒவ்வொரு பகுதியாக மூடி, பஸ் ஸ்டாண்ட், டிப்போ, துணை மின் நிலையங்கள் போன்றவை உருவாக்கப்பட்டன. போக்குவரத்துக்காக ரோடு போடப்பட்டது. அதனால், உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம் என இரண்டாக பிரிந்தது.இதன் காரணமாகவே, இரு குளத்திலும் தண்ணீர் தேக்கும்போது, சம மட்டத்தில் தேங்கியிருக்கும். உக்கடம் பெரிய குளத்தில் இருந்து உபரி நீர் வெளியேறும்போது, வாலாங்குளத்திலுள்ள தண்ணீர் 'ரிவர்ஸ்' ஆகி, சமமாகி விடும். வாலாங்குளத்தில் இருந்து போலீஸ் கந்தசாமி லைன் வீதி, மசால் லே-அவுட், புலியகுளம், அம்மன் குளம் வழியாக சங்கனுார் பள்ளத்தை அடைந்து, அம்மன் குளத்துக்குச் செல்ல வேண்டும். இக்குளம் நிரம்பி, மீண்டும் சங்கனுார் பள்ளத்துக்கு தண்ணீர் திரும்பி வரும். அத்தண்ணீர் சிங்காநல்லுார் குளத்துக்குச் செல்லும்.கேபியான் கரைகள்!2016ல், மேயராக ராஜ்குமார் இருந்தபோது, இரண்டு தனியார் நிறுவனங்களிடம், சமுதாய பொறுப்பு திட்டத்தில், ஒரு கோடி ரூபாய் பெற்று, சுங்கம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு பின்புறமுள்ள கரையை பலப்படுத்தி, 'கேபியான்' தொழில்நுட்பத்தில், சுவர் எழுப்பப்பட்டது.நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, கான்கிரீட் கட்டுமானங்களாக இல்லாமல், கருங்கற்கள் அடுக்கப்பட்டன. கரையில் பொதுமக்கள் நின்று, குளத்தின் அழகை ரசிக்க, கம்பி வலை அமைக்கப்பட்டது.அப்போது, உபரி நீர் செல்லும் பாதை சுருக்கப்பட்டு, இரு குழாய்கள் மட்டும் பதிக்கப்பட்டன. இதை மாநகராட்சி அதிகாரிகள் கவனிக்காமல் விட்டு விட்டனர்.கட்டமைப்பை மாற்ற உத்தரவுதற்போது, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 67.86 கோடி ரூபாயில் பணிகள் நடந்து வருகின்றன. இப்போதும் உபரி நீர் செல்லும் வழித்தடத்தை பொருட்படுத்தாமல், வேலைகள் செய்யப்பட்டு வருகின்றன.சில நாட்களுக்கு முன் பெய்த மழைக்கு, நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வடிந்து வந்த தண்ணீரால், வாலாங்குளம் நிரம்பியது.உக்கடம் பெரிய குளமும் நிரம்பியதால், வாலாங்குளத்தின் உபரி நீர் செல்ல முடியாத நெருக்கடி ஏற்பட்டது. மசால் லே-அவுட் வழித்தடத்தில் உள்ள மழை நீர் வடிகால் துார்வாரப்படாமல் இருப்பதால், திருச்சி ரோட்டில் வழிந்தோடியது.இப்பிரச்னைக்கு தீர்வு காண, வாலாங்குளத்தில் உபரி நீர் பகுதியை நேரில் ஆய்வு செய்த, தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நீர் செல்லும் அளவுக்கேற்ப கட்டமைப்பை மாற்றிக்கட்ட உத்தரவிட்டார்.போலீஸ் கந்தசாமி லைன் வீதி, மசால் லே-அவுட் வழியாக சங்கனுார் பள்ளம் வரை மழை நீர் வடிகால்களை புதுப்பித்துக் கட்டினால் மட்டுமே, உபரி நீர் வடிந்து செல்ல வழி கிடைக்கும் என, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் தெரிவித்தார்.வாலாங்குளத்துக்கு எந்தெந்த வழித்தடத்தில் தண்ணீர் வரும்; அதன்அளவீடு; அப்பகுதியில் கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைப்பது, மழை நீர் வடிகாலை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை பட்டியலிட்டு திட்ட மதிப்பீடு தயாரிக்க, மாநகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.இதைத்தொடர்ந்து, கனமழை பெய்யும்போது, குளத்துக்குள் நிமிடத்துக்கு எத்தனை கனஅடி தண்ணீர் வருகிறது; எத்தனை கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது என கணக்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X