செய்தி செய்தி

தமிழ்நாடு

'பள்ளிகளில் 20 நாட்களாக தொற்று பதிவாகவில்லை'

Added : நவ 20, 2021
Share
Advertisement
கோவை: கோவையில் கடந்த, நவ., 1ம் தேதி முதல் தற்போது வரை, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஒருவருக்கும், கொரோனா தொற்று பதிவாகவில்லை என சி.இ.ஓ., கீதா தெரிவித்தார்.தீபாவளி பண்டிகைக்கு பின்பு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. சுழற்சி முறையில் வகுப்பு வாரியாக மாணவர்கள் அழைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தினந்தோறும் உடல்

கோவை: கோவையில் கடந்த, நவ., 1ம் தேதி முதல் தற்போது வரை, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஒருவருக்கும், கொரோனா தொற்று பதிவாகவில்லை என சி.இ.ஓ., கீதா தெரிவித்தார்.தீபாவளி பண்டிகைக்கு பின்பு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. சுழற்சி முறையில் வகுப்பு வாரியாக மாணவர்கள் அழைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தினந்தோறும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன.ஒரு வகுப்பிற்கு 20 பேர் வீதம் அமரவைக்கப்பட்டு இருப்பதுடன், இன்டர்வல், மதிய உணவு நேரங்களில் மாணவர்கள் கூட்டம் கூடாமல் இருப்பதை, பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(சி.இ.ஓ.,) கீதா கூறுகையில், '' ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் மத்தியில், இதுவரை கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை. ஒன்பது முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆரம்பத்தில் ஆங்காங்கே ஒன்று, இரண்டு பதிவானது. தற்போது அவர்களுக்கும் பெரிதாக இல்லை. மழைக்காலம் என்பதால், மாணவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் இருப்பின் பள்ளிக்கு அனுப்புவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X