தமிழ்நாடு

நெருக்கடியில் இருந்து மீள வட்டியில்லா கடன் மத்திய, மாநில அரசுகளிடம் 'டேக்ட்' கோரிக்கை

Added : நவ 20, 2021
Share
Advertisement
கோவை: பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள மத்திய, மாநில அரசுகள், 50 சதவீத மானியத்துடன் வட்டியில்லா கடன் வழங்க, 'டேக்ட்' வேண்டுகோள் விடுத்துள்ளது.தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க(டேக்ட்) ஆண்டு பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.இதில், 2022ம் ஆண்டுக்கு, தலைவராக ஜேம்ஸ், பொதுச்செயலாளராக பிரதாப்சேகர், பொருளாளராக லீலாகிருஷ்ணன் மற்றும் துணை

கோவை: பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள மத்திய, மாநில அரசுகள், 50 சதவீத மானியத்துடன் வட்டியில்லா கடன் வழங்க, 'டேக்ட்' வேண்டுகோள் விடுத்துள்ளது.தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க(டேக்ட்) ஆண்டு பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.இதில், 2022ம் ஆண்டுக்கு, தலைவராக ஜேம்ஸ், பொதுச்செயலாளராக பிரதாப்சேகர், பொருளாளராக லீலாகிருஷ்ணன் மற்றும் துணை தலைவர்கள் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்மூலப்பொருட்களின் விலை ஓராண்டில், 100 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், கோவை மாவட்டத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 'ஜாப் ஆர்டர்'களை மட்டுமே நம்பி வாழும் குறுந்தொழில்கள் வேலைகள் இழந்து, கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன.எனவே, தொழில்களை பாதுகாக்க மத்திய அரசு, 2 லட்சம் ரூபாய், மாநில அரசு ஒரு லட்சம் ரூபாயை, 50 சதவீதம் மானியத்துடன் வட்டியில்லா கடனாக வழங்க வேண்டும்.தமிழக அரசு தனிநல வாரியம் அமைத்து, அதில் குறு, சிறு தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறசெய்ய வேண்டும்.மாநிலம் முழுவதும் மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, தொழில் அமைப்புகள் நடத்தவுள்ள போராட்டத்தில் சங்கத்தினர் பங்கேற்க வேண்டும்.கோவையில் குறுந்தொழில் பேட்டை அமைக்கதமிழக அரசு உதவி செய்ய வேண்டும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X