செய்தி செய்தி

தமிழ்நாடு

வேலை வேண்டுமா இளைஞர்களே... வரும் 27ம் தேதி முகாமில் கிடைக்கும்

Added : நவ 20, 2021
Share
Advertisement
கோவை: கோவையில் வரும், 27ம் தேதி நடக்க உள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமை, படித்த இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்தார்.தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், திட்ட செயலாக்க அலுவலகம்(மகளிர் திட்டம்) மற்றும் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், படித்த மற்றும் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும், 27ம் தேதி நடத்தப்படுகிறது.காலை, 8:00

கோவை: கோவையில் வரும், 27ம் தேதி நடக்க உள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமை, படித்த இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்தார்.தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், திட்ட செயலாக்க அலுவலகம்(மகளிர் திட்டம்) மற்றும் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், படித்த மற்றும் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும், 27ம் தேதி நடத்தப்படுகிறது.காலை, 8:00 முதல் மாலை,4:00 மணி வரை கோவை, நியூசித்தாபுதுார், பாரதியார் ரோட்டிலுள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் முகாம் நடக்க உள்ளது.முன்னணி ஐ.டி., நிறுவனங்கள், ஆட்டோமொபைல், கார்மென்ட்ஸ், கட்டுமானம் மற்றும் விற்பனைத்துறை சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்று, வேலைவாய்ப்பு வழங்க உள்ளனர்.இதில், 8ம் வகுப்பு முதல், தொழில்நுட்ப கல்வி, பட்டயப்படிப்பு, இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் வரை பயின்றவர்கள், கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, பயோடேட்டா, புகைப்படம் மற்றும் இதர பகுதி சான்றுகளுடன்(அசல் மற்றும் நகல்களுடன்) பங்கேற்று பயனடைய கலெக்டர் சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X