செய்தி செய்தி

தமிழ்நாடு

மக்கள் சபையில் பெற்ற மனுக்கள்: பிரித்து அனுப்பும் பணி தீவிரம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
கோவை: கோவையில் மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் பெறப்பட்ட மனுக்களை, துறை வாரியாக பிரித்து அனுப்பும் பணியில், மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.தமிழக முதல்வர் உத்தரவுப்படி, கோவையில் தொகுதி வாரியாக மக்கள் சபை நிகழ்ச்சி நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து, மனுக்கள் பெறப்பட்டன. மாநகராட்சிக்குட்பட்ட, 100 வார்டுகள், நகராட்சி, பேரூராட்சிகள் என மொத்தம், 150 இடங்களில்

கோவை: கோவையில் மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் பெறப்பட்ட மனுக்களை, துறை வாரியாக பிரித்து அனுப்பும் பணியில், மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.தமிழக முதல்வர் உத்தரவுப்படி, கோவையில் தொகுதி வாரியாக மக்கள் சபை நிகழ்ச்சி நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து, மனுக்கள் பெறப்பட்டன. மாநகராட்சிக்குட்பட்ட, 100 வார்டுகள், நகராட்சி, பேரூராட்சிகள் என மொத்தம், 150 இடங்களில் மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகள் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றனர். மொத்தம் ஒரு லட்சத்து, 41 ஆயிரத்து, 351 மனுக்கள் பெறப்பட்டன.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறுகையில், 'மக்கள் சபை நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுக்களை கையாள பிரத்யேகமாக ஒரு தாசில்தார் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கீழ், 10 ஊழியர்கள் உள்ளனர். தாசில்தார் தலைமையிலான இக்குழுவினர், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை அந்தந்த உள்ளாட்சி வாரியாகவும், பின் துறை ரீதியாகவும் பிரித்து அனுப்பி, கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X