எரிபொருள் விலை குறைக்க கோரி பா.ஜ., உண்ணாவிரதம்

Added : நவ 20, 2021 | கருத்துகள் (1)
Advertisement
கோவை: தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காததை கண்டித்து பா.ஜ., சார்பில்,சிவானந்தா காலனியில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.போராட்டத்துக்கு தலைமை வகித்த பா.ஜ., மாவட்ட தலைவர் நந்தகுமார் கூறியதாவது:தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலையை ஐந்து ரூபாய் குறைப்பதாக கூறியது. ஆட்சிக்கு வந்த பிறகு விலையை குறைக்கவில்லை. பெட்ரோலுக்கு மட்டும் மூன்று

கோவை: தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காததை கண்டித்து பா.ஜ., சார்பில்,சிவானந்தா காலனியில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.போராட்டத்துக்கு தலைமை வகித்த பா.ஜ., மாவட்ட தலைவர் நந்தகுமார் கூறியதாவது:தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலையை ஐந்து ரூபாய் குறைப்பதாக கூறியது. ஆட்சிக்கு வந்த பிறகு விலையை குறைக்கவில்லை. பெட்ரோலுக்கு மட்டும் மூன்று ரூபாய் குறைத்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. அதே போல் கர்நாடகா, புதுச்சேரி மற்றும் வட மாநிலங்கள் விலையை குறைத்து உள்ளன. ஆனால் தமிழகத்தில்விலை குறையவில்லை. இதை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, மாவட்ட செயலாளர்கள் முரளி, ரமேஷ், தாமு, மாவட்ட துணைத்தலைவர் மதன் உள்ளிட்ட, 200 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
21-நவ-202116:47:26 IST Report Abuse
pattikkaattaan திமுக அரசு ஐந்து ரூபாய் குறைக்கவேண்டும் ... அதேபோல பாஜக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வாக்களித்தபடி நாற்பது ரூபாய்க்கு பெட்ரோல் விலையை குறைக்கவேண்டும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X