அரசியல் செய்தி

தமிழ்நாடு

எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா தி.மு.க.,: கூட்டணி கட்சிகள் கலக்கம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
கோவை: தி.மு.க., கூட்டணியில் தாங்கள் எதிர்பார்க்கும் வார்டுகளில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என எண்ணி, கூட்டணி கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், கம்யூ.,- வி.சி.,- கொ.ம.தே.க., -ம.தி.மு.க.,- த.மு.மு.க.,- முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன.சட்டசபை தேர்தலில் இந்த கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் தி.மு.க., தலைமை கறாரான அணுகுமுறையை



கோவை: தி.மு.க., கூட்டணியில் தாங்கள் எதிர்பார்க்கும் வார்டுகளில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என எண்ணி, கூட்டணி கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், கம்யூ.,- வி.சி.,- கொ.ம.தே.க., -ம.தி.மு.க.,- த.மு.மு.க.,- முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன.சட்டசபை தேர்தலில் இந்த கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் தி.மு.க., தலைமை கறாரான அணுகுமுறையை பின்பற்றியது.வழக்கமாக போட்டியிடும் இடங்களை காட்டிலும் குறைவான தொகுதிகளே வழங்கப்பட்டன.வேறு வழியின்றி அதை ஏற்றுக் கொண்ட கூட்டணி கட்சியினர், இப்போது நடக்கவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை, ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, கோவை மாநகராட்சியில் போட்டியிட, கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளுமே ஆர்வமாக இருக்கின்றன. காங்., சார்பில் மேயர் பதவி வகித்துள்ளனர். கம்யூ., மார்க்சிஸ்ட், ம.தி.மு.க.,வினர் கவுன்சிலர்களாக இருந்துள்ளனர். அதிக எண்ணிக்கையில் வார்டுகளில் போட்டியிட்டும் உள்ளனர்.கடந்த கால தேர்தல்களை போல, இப்போதும் வார்டுகளில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா, அல்லது தி.மு.க., தனிப்பெரும்பான்மை பெற வேண்டும் என்பதற்காக, சட்டசபை தேர்தலை போலவே வார்டுகளையும் குறைத்து ஒதுக்கி விடுவார்களா என்ற அச்சம், கூட்டணி கட்சியினர் மத்தியில் உள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் செயல்படும், மாவட்ட தி.மு.க., மாநகரில் 100 வார்டுகளையும் கைப்பற்ற வரிந்து கட்டி களம் இறங்கியுள்ளது.பெயரளவுக்கு கூட்டணிக் கட்சிகளுக்கு,ஒன்றிரண்டு வார்டுகளை மட்டுமே தி.மு.க., ஒதுக்கும் என்றும், அதிகம் கேட்டால் கழற்றி விடவும் வாய்ப்புள்ளது என்றும்பரவும் தகவல்களால்,கூட்டணி கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X