பொது செய்தி

தமிழ்நாடு

வனத்துறை பணிகள் 'டிஜிட்டல்' மயம்!

Added : நவ 20, 2021
Share
Advertisement
சென்னை:வனத்துறையில் அனைத்து பிரிவுகளின் பணிகளையும், 'டிஜிட்டல்' முறைக்கு மாற்ற, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வனத்துறையில் மேனுவல் முறையில் பராமரிக்கப்படும் ஆவணங்கள், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட உள்ளன. இதனால், அதிகாரிகள் எங்கிருந்தும் ஆவணங்களை கையாள முடியும்.மேலும், வனத்துறைக்கு என தனியாக புவிசார் தகவல்

சென்னை:வனத்துறையில் அனைத்து பிரிவுகளின் பணிகளையும், 'டிஜிட்டல்' முறைக்கு மாற்ற, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வனத்துறையில் மேனுவல் முறையில் பராமரிக்கப்படும் ஆவணங்கள், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட உள்ளன. இதனால், அதிகாரிகள் எங்கிருந்தும் ஆவணங்களை கையாள முடியும்.மேலும், வனத்துறைக்கு என தனியாக புவிசார் தகவல் தொகுப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வனவளங்கள் கணக்கெடுப்பு மற்றும் சரி பார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.வன உயிரின வழித்தடங்கள், சூழல் தாக்க மண்டலங்கள், ஈர நிலங்கள், வன உயிரின வாழ்விடங்கள், அதில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் குறித்த விபரங்கள், டிஜிட்டல் முறையில் தொகுக்கப்பட உள்ளன.

இதனால், வன நிர்வாக பணிகள் மிகவும் துல்லியமாகும்.இதற்கு தமிழக அரசின் ஒப்புதல் பெறும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில், இதற்கான உத்தரவை எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X