தமிழ்நாடு

மாநகராட்சியுடன் இணைந்து... நகருக்குள்ளே வனம்! ரிசர்வ் சைட்களில் அமைகிறது!

Updated : நவ 21, 2021 | Added : நவ 20, 2021
Share
Advertisement
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பொது ஒதுக்கீட்டு இடங்களில், தன்னார்வ அமைப்பினர் உதவியுடன் நகர் வனம் அமைக்கும் பணி நேற்று துவங்கியது.கோவையில் வெவ்வேறு குடியிருப்பு பகுதிகளில் காலியாக இருக்கும் பொது ஒதுக்கீட்டு இடங்களில், தன்னார்வலர்கள் உதவியுடன் நகர் வனம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த பணியை, தி.மு.க., சுற்றுச்சூழல் அணியினர், மாநகராட்சி
 மாநகராட்சியுடன் இணைந்து... நகருக்குள்ளே வனம்! ரிசர்வ் சைட்களில் அமைகிறது!

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பொது ஒதுக்கீட்டு இடங்களில், தன்னார்வ அமைப்பினர் உதவியுடன் நகர் வனம் அமைக்கும் பணி நேற்று துவங்கியது.கோவையில் வெவ்வேறு குடியிருப்பு பகுதிகளில் காலியாக இருக்கும் பொது ஒதுக்கீட்டு இடங்களில், தன்னார்வலர்கள் உதவியுடன் நகர் வனம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த பணியை, தி.மு.க., சுற்றுச்சூழல் அணியினர், மாநகராட்சி மற்றும் பொது சேவை அமைப்பினருடன் இணைந்து செய்வதற்கு முன் வந்துள்ளனர்.
வெவ்வேறு இடங்களில் 70 பொது ஒதுக்கீட்டு மனைகளை பார்வையிட்ட சுற்றுச்சூழல் அணியினர், அவற்றில் நகர் வனம் அமைக்க தகுதியான 35 இடங்களை தேர்வு செய்தனர்.இவற்றில் 9 இடங்களில் உடனடியாக பணியை துவக்க, மாநகராட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். முதல் கட்டமாக, வடவள்ளி அலமேலு மங்கை அவென்யூ ரிசர்வ் சைட்டில், ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் உதவியுடன், மரக்கன்று நடும் பணி நேற்று தொடங்கியது.
மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், பணியை தொடங்கி வைத்தார். தி.மு.க., சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் மணி சுந்தர், ஓசை அமைப்பின் தலைவர் காளிதாசன்

ஆகியோர் பேசினர். மாநகராட்சி அதிகாரிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மணி சுந்தர் கூறுகையில், ''பசுமைப் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்ற மாநில அரசின் நோக்கத்துக்கு ஏற்ப இந்த பணியை, தி.மு.க., சுற்றுச்சூழல் அணி மேற்கொண்டுள்ளது. இதன்படி, பொது ஒதுக்கீட்டு இடங்களில் அந்தந்த பகுதி குடியிருப்போருக்கு பயன்படும் வகையில், நகர் வனங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் அனைத்தும் ஸ்பான்சர் உதவியுடன் செய்யப்படும். ஒப்பந்தம் செய்யப்பட்ட 9 இடங்களிலும் டிசம்பர் இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X