பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி போட்டால் தான் வணிக வளாகம் போகலாம்!

Added : நவ 20, 2021
Share
Advertisement
சென்னை:'வணிக வளாகம், திரையரங்கம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில், கொரோனா தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர்செல்வ விநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கொரோனா பரவலை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். எனவே, மார்க்கெட்,

சென்னை:'வணிக வளாகம், திரையரங்கம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில், கொரோனா தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர்செல்வ விநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கொரோனா பரவலை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். எனவே, மார்க்கெட், திரையரங்கம், வணிக வளாகம், பள்ளி, கல்லுாரிகள், விளையாட்டு மைதானம், ஓட்டல்கள், தொழிற்சாலை உள்ளிட்ட பொது இடங்களில், தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

இவற்றை, அந்தந்த உரிமையாளர்கள், பொது சுகாதாரத் துறை சட்டம் - 1939ன்படி உறுதி செய்ய வேண்டும்.அவ்வாறு தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே உரிமையாளர்கள் அனுமதிக்கிறார்களா என்பதை, அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X