பொது செய்தி

தமிழ்நாடு

அக்., 1 முதல் நேற்று வரை 68 சதவீதம் கூடுதல் மழை

Added : நவ 20, 2021
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் உள்ள 419 நிவாரண முகாம்களில், 34 ஆயிரத்து 397 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.வடகிழக்கு பருவமழை காலத்தில், அக்., 1 முதல் நேற்று வரை, தமிழகத்தில் 52 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இது, இயல்பான மழை அளவை காட்டிலும் 68 சதவீதம் கூடுதல். தமிழகத்தில் 24 மணி நேரத்தில், 37 மாவட்டங்களில் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்

சென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் உள்ள 419 நிவாரண முகாம்களில், 34 ஆயிரத்து 397 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காலத்தில், அக்., 1 முதல் நேற்று வரை, தமிழகத்தில் 52 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இது, இயல்பான மழை அளவை காட்டிலும் 68 சதவீதம் கூடுதல். தமிழகத்தில் 24 மணி நேரத்தில், 37 மாவட்டங்களில் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. மேலும், 45 ஆயிரத்து 695 ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் மூன்று பேர் இறந்துள்ளனர்; 368 கால்நடைகள் இறந்துள்ளன; 2,380 குடிசைகள், 920 வீடுகள் சேதமடைந்து உள்ளன. இதுவரை பெய்த மழை காரணமாக, 14 மாவட்டங்களில் 419 முகாம்களில் 34 ஆயிரத்து 397 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.சென்னை மாநகராட்சியில் மழை நீர் தேங்கிய 354 பகுதிகளில், 272 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X