சீனாவுக்கு கடிவாளம் ஏவுகணைகள் தயார்

Added : நவ 20, 2021
Share
Advertisement
புதுடில்லி:எல்லையில் அண்டை நாடான சீனாவின் மிரட்டலை சமாளிக்கும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து வாங்கியுள்ள எஸ் - 400 ரக ஏவுகணைகளை அடுத்தாண்டு துவக்கத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.சீனாவின் அத்துமீறலைத் தொடர்ந்து, எல்லையில் நம் படைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன; மேலும் பல ஆயுதங்கள், தளவாடங்களும் குவிக்கப்பட்டுள்ளன. சீனாவின்
 சீனாவுக்கு கடிவாளம் ஏவுகணைகள் தயார்

புதுடில்லி:எல்லையில் அண்டை நாடான சீனாவின் மிரட்டலை சமாளிக்கும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து வாங்கியுள்ள எஸ் - 400 ரக ஏவுகணைகளை அடுத்தாண்டு துவக்கத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
சீனாவின் அத்துமீறலைத் தொடர்ந்து, எல்லையில் நம் படைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன; மேலும் பல ஆயுதங்கள், தளவாடங்களும் குவிக்கப்பட்டுள்ளன. சீனாவின் எந்த அச்சுறுத்தலையும் சமாளிக்க முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன.எல்லை பதற்றத்தை தணிக்க பேச்சு நடந்து வரும் வேலையில், நம் படைகளுக்கு வலு சேர்க்கும் பணிகளும் நடந்து வருகின்றன.இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து எஸ் - 400 ரக ஏவுகணைகள் வாங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக இரண்டு ஏவுகணைகள் வந்து சேர்ந்துள்ளன. அவற்றை நிறுவுவதற்கு தேவையான சாதனங்கள் அடுத்த மாதத்தில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இந்த ஏவுகணைகளை இயக்குவதற்கான பயிற்சியும் நம் ராணுவக் குழுவுக்கு ரஷ்யாவில் வழங்கப்பட்டு உள்ளது.லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் எல்லையை ஒட்டியுள்ள தன் பகுதியில் சீனாவும் எஸ் - 400 ரக ஏவுகணைகளை நிறுத்தி வைத்துள்ளது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதையொட்டியுள்ள நம் எல்லையில் புதிதாக வந்துள்ள எஸ் - 400 ரக ஏவுகணைகளை நிறுத்த ராணுவம் திட்டமிட்டு உள்ளது. அடுத்தாண்டு துவக்கத்தில் இவை பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X