இம்ரான் கான் பெரிய அண்ணனா? காங்கிரசுக்கு பா.ஜ., கண்டனம்!

Updated : நவ 22, 2021 | Added : நவ 20, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி:'பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் என் பெரியண்ணன்' என, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக காங்கிரசுக்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இந்த மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து
இம்ரான் கான் ,அண்ணனா?  காங்., பா.ஜ., கண்டனம்!

புதுடில்லி:'பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் என் பெரியண்ணன்' என, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக காங்கிரசுக்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இந்த மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து உள்ளார்.
பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில், கர்தார்பூர் என்ற இடத்தில் 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா உள்ளது. இந்த புனித தலத்திற்கு இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் 'விசா' இன்றி செல்வதற்காக, இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் எல்லையில் இருந்து கர்தார்பூர் வரை பாதை போடப்பட்டுள்ளது. சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக்கின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கர்தார்பூர் குருத்வாராவுக்கு சீக்கியர்கள் செல்ல, கர்தார்பூர் பாதையை மத்திய அரசு திறந்தது.

இந்த பாதை வழியாக கர்தார்பூருக்கு சென்ற சீக்கியர்களில் சித்துவும் ஒருவர். அவரை, பாக்., பிரதமர் இம்ரான் கான் சார்பில் அதிகாரி ஒருவர் வரவேற்றார். அப்போது சித்து, 'இம்ரான் கான் என் பெரிய அண்ணன்; அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்' என கூறினார். இதன் 'வீடியோ' பதிவு சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்நிலையில் பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா கூறியதாவது:ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தையும் அவமானப்படுத்துவது காங்கிரசின் பிறவிக்குணம். ஆனால், இப்போது நாட்டையே அவமானப்படுத்தும் நிலைக்கு இறங்கிவிட்டது.ஹிந்துத்வாவில் ஐ.எஸ்., பயங்கரவாதம் இருப்பதாக கூறிய காங்கிரஸ், பாக்., பிரதமரிடம் சகோதர பாசத்தை கண்டுபிடித்துள்ளது.பாகிஸ்தானை பாராட்டினால் இங்குள்ள சிலருக்கு பிடிக்கும் என காங்கிரஸ் கருதுவதால், இந்தியாவை அவமதிக்கும் வேலையை செய்கிறது.

பஞ்சாபில் பயங்கரவாதத்தை துாண்டிவிட்டது பாகிஸ்தான் தான் என சொல்லத் தேவையில்லை. அங்கு பயங்கரவாதத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் துணை போகிறதா என தெரியவில்லை. இம்ரான் கானை சித்து ஏற்கனவே பாராட்டியுள்ளார்; பாக்., ராணுவ தலைமை தளபதியை கட்டி அணைத்துள்ளார். அப்போதும் அவர் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
22-நவ-202109:00:24 IST Report Abuse
Milirvan சிங்கு.. உங்கண்ணன்கிட்ட இன்னொரு தபா மும்பை அட்டாக் மாதிரி ஏதாவது செய்ய சொல்லிட்டியா? சீக்கிய குருமார்களை ரம்பம் வச்சி உச்சந்தலைல இருந்து சரிபாதியா வகுந்து கொன்னவுனுங்க சந்ததி கிட்ட சகவாசம் வச்சி கொஞ்சுற உனுக்கு சிங்கு'ன்னு பேர் வச்சிக்க கூசலையா? ஒவ்வொரு குருத்வாராவிலேயும் இந்த படம் இருக்கே? கான்கிராஸ்'ன்னாலே அப்புடித்தானா? அப்போ சரி..
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
21-நவ-202118:10:57 IST Report Abuse
DVRR ஏன்???அவன் தனது உண்மை மனநிலையை தானே சொன்னான்???அப்படித்தானே முஸ்லீம் நேரு காங்கிரஸ் இருக்கின்றது.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
21-நவ-202114:36:53 IST Report Abuse
M  Ramachandran அவர்கள் ( காங்கிரஸ் ) உண்மையாய் சொல்லுகிறார்கள் உங்களுக்கென்ன இதில் அவர்கள் பக்கத்தில் துணை நிற்பவர்கள் யார் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.பாக்கிஸ்தான் பெரிய அன்னன் அப்போ சீனன் மாமனா? அது தான் உண்மை கூட. சீனன் சகோதரிக்கு ( இத்தாலி கறிக்கு சீதனம் கொடுத்ததால் அப்போ இத்தாலியும் சீனன் சொந்தமா?) சன்மானமாக பணக்குவியல் கொடுத்தான். அதனால் தான் இவர்களையெல்லாம் உறவு முறை குடும்பம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X