துளிகள் செய்தி

தமிழ்நாடு

சுகுணா மண்டபத்தில் வீடு, கார் கண்காட்சி

Added : நவ 20, 2021
Share
Advertisement
கோவை: பேங்க் ஆப் பரோடா மற்றும் கிரெடாய் சார்பில், வீடு மற்றும் கார் கண்காட்சி பீளமேடு சுகுணா கல்யாண மண்டபத்தில் துவங்கியது.இந்த கண்காட்சியில், பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைந்து, 20 கட்டுமான நிறுவனங்கள், 10 கார் நிறுவனங்கள் ஸ்டால்கள் அமைத்துள்ளன. வாடிக்கையாளருக்கு குறைந்த வட்டியில் வீடு கட்ட, இடம் வாங்க மற்றும் கார் வாங்க வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. இடைத்தரகர்கள்

கோவை: பேங்க் ஆப் பரோடா மற்றும் கிரெடாய் சார்பில், வீடு மற்றும் கார் கண்காட்சி பீளமேடு சுகுணா கல்யாண மண்டபத்தில் துவங்கியது.இந்த கண்காட்சியில், பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைந்து, 20 கட்டுமான நிறுவனங்கள், 10 கார் நிறுவனங்கள் ஸ்டால்கள் அமைத்துள்ளன. வாடிக்கையாளருக்கு குறைந்த வட்டியில் வீடு கட்ட, இடம் வாங்க மற்றும் கார் வாங்க வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. இடைத்தரகர்கள் இல்லாமல் விற்பனையாளர்களை நேரடியாக சந்தித்து, விரும்பும் சொத்துக்களை வாங்கலாம்.வங்கி சார்பில் வட்டி விகிதம் மற்றும் கட்டணத்தில் சிறப்பு தள்ளுபடி அளிக்கிறது. தேவையான ஆவணங்களுடன் கண்காட்சிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு, நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு, உடனடி கடன் அளிக்கப்படும் என, பேங்க் ஆப் பரோடா மண்டல துணைப்பொது மேலாளர் ராஜ்வேல் தெரிவித்தார்.கிரடாய் மாநில செயலாளர் அபிஷேக், மாவட்ட தலைவர் குகன், செயலாளர் ராஜீவ், பரோடா வங்கி கோவை பிராந்திய மேலாளர் ககடால், துணை பொது மேலாளர் முருகையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கண்காட்சி காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X