சில வரி செய்திகள்...: இந்தியா

Added : நவ 20, 2021
Share
Advertisement
சாலை விபத்து: 5 பேர் பலி ஆமதாபாத்: குஜராத்தின் ஆமதாபாத் மாவட்டம் வாலானா அருகே, நேற்று காலை பயணியர் வேன் மீது டேங்கர் லாரி மோதியது. விபத்தில், வேனில் இருந்த இரு பெண்கள் உட்பட நால்வர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நால்வர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். வழியில் மற்றொருவர் இறந்ததால், பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது; மூவருக்கு சிகிச்சை
 சில வரி செய்திகள்...: இந்தியா

சாலை விபத்து: 5 பேர் பலி

ஆமதாபாத்: குஜராத்தின் ஆமதாபாத் மாவட்டம் வாலானா அருகே, நேற்று காலை பயணியர் வேன் மீது டேங்கர் லாரி மோதியது. விபத்தில், வேனில் இருந்த இரு பெண்கள் உட்பட நால்வர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நால்வர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். வழியில் மற்றொருவர் இறந்ததால், பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது; மூவருக்கு சிகிச்சை தொடர்கிறது.
தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு

லதேஹர்: ஜார்க்கண்டின் லதேஹர் மாவட்டம் ரிச்சுகுடா மற்றும் டெமு ரயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாளத்தில் நேற்று முன்தினம் இரவு குண்டு வெடித்தது. இதில் தண்டவாளம் பலத்த சேதம் அடைந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது; சீரமைப்பு பணிகள் தொடர்கிறது. தலைக்கு 1 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல் பயங்கரவாதிகளின் தலைவர் பிரசாந்த் போஸ் சமீபத்தில் கைதானார். இதை கண்டித்து நேற்று தேசிய அளவிலான 'பந்த்'திற்கு அழைப்பு விடுத்திருந்த பயங்கரவாதிகள் தண்டவாளத்தை தகர்த்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டம் அஷ்முஜி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை அறிந்த பாதுகாப்புப் படையினர், நேற்று காலை தேடுதல் வேட்டையை துவங்கினர். அப்போது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதால் வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார்.
பெண்ணுக்கு 202 நாள் சிகிச்சை
தாஹோத்: குஜராத்தின் தாஹோத் நகரை சேர்ந்தவர் திரிலோக் தர்மிக். ரயில்வே இன்ஜினியரான இவரது மனைவி கீதா தர்மிக், 45. இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த காலமான மே 1ம் தேதி, கீதாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. தாஹோத் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, 'வென்டிலேட்டர்' உதவியுடன் சிகிச்சை தொடர்ந்தது. இந்நிலையில், 202 நாள் சிகிச்சைக்கு பின் குணமடைந்த கீதா வீடு திரும்பி உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X