வினோதமான விஷயம்!

Added : நவ 20, 2021
Advertisement
வினோதமான விஷயம்! அமைச்சரவை கூட்டத்தை நடத்தாமல் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பா.ஜ., ஆட்சியில் மட்டும் தான் இப்படி அமைச்சரவை ஒப்புதல் இன்றி சட்டங்கள் இயற்றப்பட்டு, அவை திரும்பப்பெறும் வினோதங்கள் எல்லாம் நடக்கும்.சிதம்பரம்மூத்த தலைவர், காங்கிரஸ்விவசாயிகள் சிந்திக்கவில்லை! வேளாண் சட்டங்களில் உள்ள பிழை என்ன? பிறர் கூறிய பொய்களை
வினோதமான விஷயம்!

வினோதமான விஷயம்!

அமைச்சரவை கூட்டத்தை நடத்தாமல் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பா.ஜ., ஆட்சியில் மட்டும் தான் இப்படி அமைச்சரவை ஒப்புதல் இன்றி சட்டங்கள் இயற்றப்பட்டு, அவை திரும்பப்பெறும் வினோதங்கள் எல்லாம் நடக்கும்.
சிதம்பரம்
மூத்த தலைவர், காங்கிரஸ்
விவசாயிகள் சிந்திக்கவில்லை!

வேளாண் சட்டங்களில் உள்ள பிழை என்ன? பிறர் கூறிய பொய்களை கண்மூடித்தனமாக நம்பியதால், சிறு குறு விவசாயிகளின் நலனைப் பற்றி, விவசாய சங்கத்தினர் சிந்திக்க தவறிவிட்டனர். அதனால் தான், அந்த சட்டங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் அறிவித்தார்.
வி.கே.சிங்
மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,
போராட்டம் முடியாது!

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற முடிவு செய்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி. எனினும், குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த விவசாயிகளின் கோரிக்கையும் ஏற்கப்பட வேண்டும். அதுவரை, விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வராது.
வருண்
லோக்சபா எம்.பி., பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X