சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

ஜாதியை ஊக்குவிக்கும் கழகங்கள்!

Added : நவ 20, 2021 | |
Advertisement
ஜாதியை ஊக்குவிக்கும் கழகங்கள்!எஸ்.சுந்தாசா, கும்பகோணத்திலிருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: கடந்த அ.தி.மு.க., அரசு, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு கொடுக்கப்படும் 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியருக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டது.இது, மற்ற ஜாதியினரிடம் ஏற்படுத்திய அதிர்வலை, சட்டசபை தேர்தலில் வெளிப்பட்டது.அரசியல் காரணத்திற்காக


ஜாதியை ஊக்குவிக்கும் கழகங்கள்!எஸ்.சுந்தாசா, கும்பகோணத்திலிருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: கடந்த அ.தி.மு.க., அரசு, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு கொடுக்கப்படும் 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியருக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டது.
இது, மற்ற ஜாதியினரிடம் ஏற்படுத்திய அதிர்வலை, சட்டசபை தேர்தலில் வெளிப்பட்டது.அரசியல் காரணத்திற்காக எந்தவித விவாதமோ, புள்ளிவிபரமோ இல்லாமல் வெளியிடப்பட்ட இந்த 10.5 சதவீதம் வன்னியர் உள்ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க, அப்போதைய நீதிமன்றம் மறுத்து விட்டது.அ.தி.மு.க., தலைமையிலான அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பை, 'ஏமாற்று வேலை' என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
ஆனால், முதல்வர் பதவி ஏற்றவுடன், இதற்கு சட்ட வடிவம் கொடுக்கும் வகையில், தி.மு.க., தலைமையிலான அரசு, சட்டசபை மசோதாவை நிறைவேற்றிய பிப்., 26ம் தேதி முதல், வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த அரசாணை வெளியிட்டது.உள்ளாட்சி தேர்தலுக்காக இந்த அரசாணை வெளியிடப்பட்டது என, தி.மு.க., மீது விமர்சனம் பாய்ந்தது.
மேலும், தேர்தலுக்கு முன் இந்த விஷயத்தை எதிர்த்த தி.மு.க., கூட்டணி கட்சிகள், இப்போது எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த ஒதுக்கீட்டை எதிர்த்து, 20க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, இந்த ஒதுக்கீடு ஆணையை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.அரசு தரப்பில், 1983ம் ஆண்டு கணக்கீட்டில் 13.5 சதவீதம் வன்னியர் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதாகவும்
தெரிவிக்கப்பட்டது.அதே கணக்கீட்டில், வேறு பிற்படுத்தப்பட்ட அமைப்பினரும் உண்டு என்பதை மறந்து, இது போல வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.வன்னியர் அல்லாத மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டில் உள்ள 25 ஜாதியை சேர்ந்தோருக்கு 7.5 சதவீதமும், மற்ற 22 மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை சேர்ந்தோருக்கு 2.5 சதவீதம் மட்டுமே கிடைப்பது, பெரிய ஏற்றத்தாழ்வை
ஏற்படுத்தி இருக்கும்.இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மனு தாக்கல் செய்துள்ளது.எந்தவித மக்கள்தொகை கணக்கீட்டிலும் இல்லாத ஜாதி கணக்கை, நீதிமன்றத்தில் தமிழக அரசு எவ்வாறு கொடுக்க
முடியும்? ஒவ்வொரு அரசும், இடஒதுக்கீட்டை அதிகரித்து, சமூக சிக்கல்களை மேலும் அதிகரித்து வருகின்றன. திராவிட கட்சிகள் தான், ஜாதியை ஊக்குவிக்கின்றன.


அந்த கேள்விக்கு பதில் என்ன?எம்.கலைவாணி, அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பணமும், புகழும் அளவுக்கு மீறி சேர்ந்து விட்டால், சிலருக்கு ஆணவம் தலைக்கு ஏறி விடுகிறது.'கருத்து சுதந்திரம்' என்ற பெயரில், ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தி பேசுவது, சினிமாவில் காட்சிப்படுத்துவது தமிழகத்தில் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.நடிகர் சூர்யா தயாரித்து, நடித்து வெளியாகி உள்ள ஜெய் பீம் படம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்திஇருக்கிறது.தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவத்தை படமாக்கி, அதில் சர்ச்சையை வேண்டுமென்றே திணித்து, பணம் பார்த்து இருக்கிறார், வியாபாரி சூர்யா!அந்த படத்தின் இயக்குனர் ஞானவேலும், நடிகர் சூர்யாவும், உண்மை சம்பவத்தில் இடம்பெற்றிருந்த நபர்களின் பெயரையே, படத்திலும் அதே கதாபாத்திரங்களுக்கு சூட்டியிருந்தனர்.உண்மை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான காவல்துறை அதிகாரி அந்தோணிசாமியின் பெயரை மட்டும் மாற்றி, ஹிந்து பெயரை வைத்ததில் உள்நோக்கம் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.
அதிலும் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சார்ந்தவராக காட்டியுள்ளனர்; இதையடுத்து, சூர்யாவை பலரும் கண்டித்து வருகின்றனர். இந்த படம் தியேட்டரில் வெளியாகியிருந்தால், நிச்சயம் கலவரம் ஏற்பட்டு இருக்கும்.சர்ச்சை ஏற்படுத்தி பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம், நடிகர் சிவகுமாரின் குடும்பத்திற்கு வந்துள்ளதே!அந்த படத்தில் வழக்கறிஞர், இருளர் மக்கள், காவல்துறை உயர் அதிகாரி என, அனைவரின் பெயரும் உண்மையாக இருக்க, முக்கிய குற்றவாளியான வில்லனின் பெயர் மட்டும் ஹிந்துவாக மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் என்ன?சூர்யாவுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், அவர் அறிக்கை வெளியிட்டார். ஆனால், இந்த
முக்கியமான ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளிக்காமல் நழுவி விட்டார்.ஜாதி, மத துவேஷங்களை வெளிப்படுத்தும் படங்களுக்கு, அரசு தடை விதிக்க வேண்டும்; ஆனால் தி.மு.க., அரசு அதை செய்யாது!ஜாதி, மத மோதலை வளர்த்து, அதில் அரசியல் குளிர்காய நினைக்கும் அரசியல்வாதிகள், சூர்யா போன்ற வியாபாரிகளை ஆதரிக்கத் தான் செய்வர்.


அதென்ன மாபெரும் நாடகமா?எஸ்.கண்ணம்மா, விழுப்புரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை படகில் சென்று பார்வையிட்டார். அதை, 'போட்டோ ஷூட்' நடத்தியதாக, தி.மு.க., - எம்.பி., கனிமொழி கிண்டலாக கூறியுள்ளார்.அண்ணாமலை செய்தது நாடகம் என்றால், எதிர்க்கட்சியாக இருக்கும் போது தி.மு.க., நடத்திய போராட்டங்களுக்கு பெயர் என்ன?
'டாஸ்மாக்' கடையை திறக்கக் கூடாது என, இன்றைய முதல்வர் ஸ்டாலின் உட்பட தி.மு.க., நிர்வாகிகள் அனைவரும் கறுப்பு கொடி ஏந்தி, மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தினரே... என்ன மாபெரும் நாடகமா?ஏனெனில், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் பள்ளி, நுாலகம், கோவில்களை விட, டாஸ்மாக் கடைகளைத் தான் முதலில் திறந்து வருவாய் ஈட்டியது.அதைவிட, 'தி.மு.க.,வினர் நடத்தும் மது ஆலைகள் மூடப்படும்' என முழங்கிய கனிமொழி, அதை செயல்படுத்த வலியுறுத்தாமல், சாதாரண படகு விஷயத்திற்கு கிண்டல் செய்ய களத்தில் குதித்திருப்பது வேடிக்கை அல்லவா!பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் என, எதிர்க்கட்சியாக இருக்கும் போது தி.மு.க., நடத்தியது போட்டோ ஷூட் மட்டுமல்ல; அப்பட்டமான ஏமாற்று நாடகம் தானே!பருவ மழையை கூட முறையாக எதிர்கொள்ள திறமையற்ற நிர்வாகம் நடத்தும் தி.மு.க.,வினருக்கு, பிறரை நோக்கி கிண்டல் செய்வதற்கு தகுதி இல்லை.


துரைமுருகன் மலையாளியா?டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடந்த, 1979ல் எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது முல்லை பெரியாறு அணையின் தமிழக உரிமையை விட்டு கொடுத்து விட்டார்' என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.மேலும் அவர், 'திருவனந்தபுரத்தில் நடந்த கூட்டத்திற்கு, தமிழக பொதுப்பணி துறை அமைச்சரை அழைத்துச் செல்லாமல் எம்.ஜி.ஆர்., மட்டும் சென்றார். அங்கு கேரள மாநில முதல்வரோடு எந்த மொழியில் பேசினார் என்று எனக்குத் தெரியாது' என தெரிவித்துள்ளார்.இதன் மூலம் எம்.ஜி.ஆரை, 'மலையாளி' என மறைமுகமாக குத்திக்காட்டி விமர்சனம் செய்துள்ளார்.இவர் சொல்வதை போல, இரு மாநில முதல்வர்களும் மலையாளத்தில் பேசி ஒப்பந்தம் போட்டிருந்தால், முல்லை பெரியாறு அணை கேரளாவிற்கு சொந்தமாகி இருக்கும்.தென்மாநில முதல்வர்களை, தன் நட்பால் இணைத்து தமிழகத்திற்கு நல்லது செய்தவர், எம்.ஜி.ஆர்.தமிழகத்தில், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் தேவைப்பட்டது. அன்றைய கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார்.அவரை சந்திக்க, எம்.ஜி.ஆர்., இரு உயர் அதிகாரிகளுடன் மட்டும் பெங்களூரு சென்றார். கர்நாடக கல்வி அமைச்சர் ரகுபதி, எம்.ஜி.ஆரை வரவேற்று, தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.அங்கு சிற்றுண்டி சாப்பிட்ட போது, ரகுபதியின் தாய், 'தண்ணீர் குடியுங்கள்' என்றார். அதற்கு, எம்.ஜி.ஆர்., சிரித்தபடியே, 'எனக்கு தண்ணீர் வேண்டும் தான்; ஆனால், உங்கள் மகன் தான் தர மாட்டேன் என்கிறார்' என, ரகுபதியை பார்த்தபடி சொன்னார்.உடனே ரகுபதி, 'தண்ணீர் குடியுங்கள்; உங்களின் தாகம் தீரும்' என, இருபொருள்பட சொன்னார். பொதுப்பணி அமைச்சராக இருந்த தேவகவுடா, ரகுபதி, எம்.ஜி.ஆர்., ஆகியோர், மருத்துமனையில் இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே பார்த்தனர். இரு மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் காவிரி நீரை பகிர்ந்து கொள்வது என முடிவு
செய்தனர்.எம்.ஜி.ஆரிடம் பெங்களுரில் பேசியோர் எல்லாம் மலையாளிகளா?'நான் எம்.ஜி.ஆர்., ரசிகன்' என்று தன்னை பெருமையாக சொன்னவர், கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவ். அப்போதும், காதும் காதும் வைத்தாற்போல காவிரி நீரை திறந்துவிட செய்தார் எம்.ஜி.ஆர்.அப்படி என்றால், குண்டுராவ் என்ன மலையாளியா?சென்னை குடிநீர் பற்றக்குறையை தீர்க்க, ஆந்திர முதல்வர் என்.டி.ஆரிடம் தெலுங்கு கங்கா திட்டத்தை, எம்.ஜி.ஆர்., சொன்ன போது, அவர் மறு பேச்சின்றி ஒப்புக்கொண்டார்.அவர் என்ன மலையாளியா?ஒரு முறை, 'எம்.ஜி.ஆருடன் உங்களை எப்படி ஒப்பிடுவீர்...' என செய்தியாளர்கள் கேட்டபோது, 'என்னை யாராவது மனிதரோடு ஒப்பிட்டால், விடை சொல்ல முடியும். எம்.ஜி.ஆர்., கடவுள். அவரோடு என்னை எப்படி ஒப்பிட முடியும்?
என்றார், என்.டி.ஆர்.சரி அதெல்லாம் போகட்டும்... 'எனக்கு எம்.ஜி.ஆர்., எவ்வளவோ உதவிகளை செய்திருக்கிறார்' என, துரைமுருகனே பல முறை சொல்லியிருக்கிறார். அப்படி என்றால் துரைமுருகன் மலையாளியா என்ன?


சேவைக்கு எதுக்கு சம்பளம்?க.அருச்சுனன், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 20 ஆயிரத்தில் இருந்து, 25
ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.எம்.பி., - எம்.எல்.ஏ., போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கக் கூடாது. -ஏனெனில், அரசியல் என்பது வேலை அல்ல; சேவை.வெறும் ஐந்து ஆண்டுகள் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் நபர், தன் வாழ்நாள் முழுதும், 25 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுவது நியாயமா? அவரின் இறப்புக்கு பின், மனைவிக்கு 12 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படுகிறது.அரசு நிறுவனத்தில் 30 ஆண்டுகள் பணி புரிந்த
வரையும், ஐந்து ஆண்டுகள் மட்டும் மக்கள் பிரதிநிதியாக இருந்தவரையும் ஒப்பிடுவதும், சலுகை வழங்குவதும் சரியா?இதில் இன்னொரு குறைபாடும் உள்ளது. ஒரு நபர், முதலில் எம்.எல்.ஏ.,வாக இருந்து, அடுத்து எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றால், அவருக்கு இரண்டு ஓய்வூதியங்களும் கிடைக்குமாம். என்ன கொடுமை!
இது, இந்நாட்டிற்கு இழைக்கப்படும் துரோகம் அல்லவா?இந்நாட்டில் எந்த வேட்பாளரும் சம்பளத்திற்காக, எம்.பி., - எம்.எல்.ஏ., பதவிக்கு போட்டியிடுவதில்லை. ஆனால், அடிக்கடி அவர்களின் சம்பளம் உயர்த்தப்படுகிறது.உணவு, பயணம், தொலைதொடர்பு என, மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு அளவேயில்லை. மக்கள் பிரச்னைக்கு அடித்துக் கொள்ளும் அனைத்து கட்சி
எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களும், தங்களின் சம்பள உயர்வில் ஒற்றுமையாக உள்ளனர்.மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் நிறுத்தப்பட வேண்டும். 'கிரிமினல்' குற்றவாளிகள், அரசியலில் பங்கு பெறுவதை தடை செய்ய வேண்டும்.தேர்தல் சட்டத்தில் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தினால், நாடு முன்னேறும்.


தமிழ் விரைவில் அழியும்!ஜி.சூர்ய நாராயணன், விழுப்புரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழை அழிக்க நினைக்கும் நாத்திகக் கூட்டத்தை, தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.'தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரபந்தம், திருவருட்பா, திருக்குறள்' விரைவில் அழியும். ஆம், திராவிட மற்றும் ஹிந்து விரோதிகளின் கைகளில் அதிகாரம் இருந்தால், அவர்கள் தமிழை அழிக்கும் வேலையில் தான் ஈடுபடுவர்.தி.மு.க., ஆட்சி காலங்களில் தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக சதி நடந்தது; நடக்கிறது!முதலில் திருவள்ளுவர், ராமலிங்க அடிகள், அவ்வையார் ஆகியோரின் நெற்றியில் இருக்கும் விபூதிகள் அழிக்கப்பட்டன. அவர்களை ஹிந்துக்களாக காட்டக் கூடாது என்பதில் முனைப்புடன்
செயல்பட்டது.இப்போது, 'குள்ள நரி'கள் ஒன்று சேர்த்து, 'திருவள்ளுவரை, கிறிஸ்துவர்' என பொய் பரப்ப கிளம்பியுள்ளன. லாபம் இல்லாமலா இதை செய்வர்?திராவிட அரசியல்வாதிகளில் பலர் கிறிஸ்துவர்கள்; ஆனால், ஹிந்து பெயர்களில் உலா வருவர். அவர்களின் நோக்கம், மத மாற்றம் செய்வதே!இப்போது திருக்குறள், தேவாரம், திருவாசகம் போன்றவற்றை சிதைக்கும், பொய் பரப்புரை எழுதும் கூட்டம் சுறுசுறுப்பாக களமிறங்கி விட்டது. இலக்கியங்கள் பொய்யுரையால் மூடப்பட்டால், தமிழ் விரைவில் அழியும்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X