டில்லி 'உஷ்ஷ்ஷ்': இந்திராவின் தவறை தவிர்த்த மோடி

Updated : நவ 21, 2021 | Added : நவ 20, 2021
Share
Advertisement
வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதுடன், விவசாயிகளிடம் மன்னிப்பும் கேட்டார் பிரதமர் மோடி.'பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மோடி' என, விமர்சிக்கின்றனர் எதிர்க்கட்சியினர்.சட்டசபை தேர்தல் ஒரு காரணமாக இருந்தாலும் வேறொரு முக்கிய காரணத்தையும் கட்சியின் சீனியர் தலைவர்கள்
  டில்லி 'உஷ்ஷ்ஷ்': இந்திராவின் தவறை தவிர்த்த மோடி

வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதுடன், விவசாயிகளிடம் மன்னிப்பும் கேட்டார் பிரதமர் மோடி.'பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மோடி' என, விமர்சிக்கின்றனர் எதிர்க்கட்சியினர்.
சட்டசபை தேர்தல் ஒரு காரணமாக இருந்தாலும் வேறொரு முக்கிய காரணத்தையும் கட்சியின் சீனியர் தலைவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் செய்து வருபவர்களில் அதிகம் பேர் சீக்கியர்கள்.'விவசாயிகள் போராட்டம் என்கிற போர்வையில் சீக்கிய தீவிரவாதம் தலை துாக்கத் துவங்கியுள்ளது. இதற்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது. எனவே இந்த விஷயத்தில் கவனம் தேவை. 'இல்லையெனில் ஒழிந்து போன காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மீண்டும் தீவிரவாத செயல்களை தொடர வாய்ப்புள்ளது' என, உளவு அமைப்புகள் அளித்த அறிக்கையே, மோடியின் இந்த முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

'காங்கிரசைச் சேர்ந்த இந்திரா பிரதமராக இருந்தபோது, சீக்கியர்கள் விஷயத்தில் தவறான அணுகுமுறையை பின்பற்றி, பெரும் விளைவுகள் ஏற்பட்டன. தற்போது மோடி, அதுபோன்ற தவறை செய்யாமல் தவிர்த்துள்ளார்' என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.


மம்தா கட்சிக்கு தாவும் தமிழக பிரமுகர்


திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தற்போது மற்ற மாநிலங்களிலும் கட்சியை வளர்க்க முயற்சி எடுத்து வருகிறார். உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா சட்டசபை தேர்தல்களிலும் தன் கட்சி வேட்பாளர்களை நிறுத்த தயாராகி வருகிறார். காங்கிரஸ் கட்சி தலைவர்களை தன் பக்கம் இழுத்து, அவர்களுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவிகளை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் தமிழகத்திலும் தன் கட்சியை நிலைநிறுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். ஒரு பிரபல மூத்த தலைவர்தான் இப்போதைக்கு மம்தாவின் குறி. ஒரு காலத்தில் இந்த தலைவரின் ஆலோசனையை கட்சி தலைமை கேட்டு, தேசிய அளவில் முடிவெடுத்து வந்தது. ஆனால் இப்போது சுத்தமாக ஓங்கட்டப்பட்டு அதிருப்தியாளராகி விட்டார்.

ஒரு முக்கிய பதவியில் இருக்கும் இந்த தமிழக பிரமுகரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மத்தியில் முடிவடைகிறது. 'அந்த பதவியில் மீண்டும் அமர்த்தி விடுகிறேன். என் கட்சிக்கு வந்துவிடுங்கள்' என, அந்த பிரமுகருக்கு அழைப்பு விடுத்துள்ளார் மம்தா. விரைவில் இந்த தமிழக பிரமுகர் கோல்கட்டா சென்று மம்தாவை சந்திக்க வாய்ப்புள்ளது.


ஆளும் கட்சிக்கு ஆபத்து?


சமீபத்தில் மாநில கவர்னர்களின் மாநாடு டில்லியில் நடந்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் பிரதமர் உட்பட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற தமிழக கவர்னர் ரவி, மாநாட்டு இடைவேளையில் சீனியர் அமைச்சர்களான அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்திஉள்ளார்.

தமிழக ஆளும் கட்சி முக்கிய பிரமுகர்கள் சிலரின் நிறுவனங்கள் தொடர்பாக வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் ஆடிட்டர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் அடிக்கடி வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையில் ஆஜராகி வருகின்றனர். இந்த விசாரணை குறித்து கவர்னர், மூத்த அமைச்சர்களிடம் விவாதித்துஉள்ளதால், தமிழக ஆளும் கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் கலக்கம் அடைந்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X