பொது செய்தி

இந்தியா

'கிரிப்டோகரன்சி'க்கு அங்கீகாரம் ஆர்.எஸ்.எஸ்., கோரிக்கை

Updated : நவ 22, 2021 | Added : நவ 20, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி:'கிரிப்டோகரன்சி' களை சொத்தாக வகைப்படுத்தி அங்கீகரிக்கும்படி, ஆர்.எஸ்.எஸ்., துணை அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்ச் வலியுறுத்தியுள்ளது.வலைதளங்களில் 'கிரிப்டோகரன்சி' எனும் மெய்நிகர் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. இது குறித்து சுதேசி ஜாக்ரன் மஞ்ச் துணை அமைப்பாளர் அஸ்வனி மஹாஜன் கூறியதாவது:தற்போது தனியார் நிறுவனங்கள் நடத்தும் கிரிப்டோகரன்சி சந்தைகளில்
 கிரிப்டோகரன்சி, அங்கீகாரம் ,ஆர்.எஸ்.எஸ்., கோரிக்கை

புதுடில்லி:'கிரிப்டோகரன்சி' களை சொத்தாக வகைப்படுத்தி அங்கீகரிக்கும்படி, ஆர்.எஸ்.எஸ்., துணை அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்ச் வலியுறுத்தியுள்ளது.
வலைதளங்களில் 'கிரிப்டோகரன்சி' எனும் மெய்நிகர் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. இது குறித்து சுதேசி ஜாக்ரன் மஞ்ச் துணை அமைப்பாளர் அஸ்வனி மஹாஜன் கூறியதாவது:தற்போது தனியார் நிறுவனங்கள் நடத்தும் கிரிப்டோகரன்சி சந்தைகளில் உலகில் எந்த இடத்தில் இருந்தும் யாரும் முதலீடு செய்யலாம்.

இவற்றின் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தவும், பரிவர்த்தனைகளை கண்காணித்து கட்டுப் படுத்தவும் ரிசர்வ்வங்கி போன்ற எந்த அமைப்பும் இல்லை.எனவே மத்திய அரசு, கிரிப்டோ கரன்சிகளை சொத்து பிரிவில் சேர்த்து அவற்றின் பரிவர்த்தனையை அங்கீகரிக்கலாம். இதனால் கிரிப்டோகரன்சி வர்த்தகம் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நாட்டின் பாதுகாப்பு, வரி வருவாய் ஆகியவற்றுக்கும் இந்த அங்கீகாரம் உதவும்.

சட்டவிரோதமாக ஆயுதங்கள், போதை மருந்துகள் வாங்க கிரிப்டோகரன்சி பயன்படுத்தப் படுகிறது. கிரிப்டோகரன்சியை அங்கீகரித்து ஒழுங்குமுறையை ஏற்படுத்தினால், அதன் சட்ட விரோத பயன்பாட்டை தடுக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
21-நவ-202113:43:48 IST Report Abuse
Barakat Ali க்ரிப்டோ கரன்சியால நல்லதா இல்லையான்னு தெரியல ஆர் எஸ் எஸ் ஆதரிச்சிருச்சு அதனால நாம எதிர்த்திருவோம் அப்பத்தான் டுமீல் நாட்டுல ஒட்டு கிடைக்கும்
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
21-நவ-202110:46:03 IST Report Abuse
pattikkaattaan ஆமாங்க... அங்கீகாரம் கொடுத்து GST க்குள்ள கொண்டுவந்திருங்க .. அது என்னங்க கண்ணுக்கே தெரியாத பணமாம் .. நம்ம பட்டிக்காட்டு அறிவுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க .. சூதானமா இருந்துக்கணும்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-நவ-202109:41:26 IST Report Abuse
Kasimani Baskaran அனைத்து நாடுகளும் சேர்ந்து நெறிப்படுத்த முயலலாம். அந்த முயற்சி தோல்வியில் கூட முடியலாம் - அதாவது அந்தத்தொழில் நுணுக்கம் அப்படிப்பட்டது. மெய்நிகர் நாணயங்கள் அடிக்கடி வலுவிழக்கலாம் அல்லது காணாமல் போகலாம். ஆனால் பிளாக்செயினுக்கு ஏறாளமான பயன்கள் இருப்பதால் அவை நிலைத்திருக்கும். அதில் முதலீடு செய்தால் ஓரளவுக்கு பாதுகாப்பானது. எங்கு பணத்தை மெய்நிகர் பணமாக மாற்றுகிறார்களோ அங்கும், எங்கு திரும்ப பணமாக மாற்றுகிறார்களோ அங்கும் அதிக கவனமாக இருந்தால் சிக்கல்கள் இல்லை. முழு ஆதாரங்களும் பிளாக் செயினில் பதிவு செய்யப்படுவதால் டகால்டி வேலைகள் செய்ய முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X