ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டு ஆதாரமில்லை என்கிறது ஐகோர்ட்

Added : நவ 20, 2021
Share
Advertisement
மும்பை:போதை பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை எனக் கூறி ஜாமின் அளித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு விபரம் தற்போது வெளியாகியுள்ளது.நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யனகான் போதை பொருள் வைத்திருந்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். உத்தரவுஆர்யனின் ஜாமின் மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி

மும்பை:போதை பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை எனக் கூறி ஜாமின் அளித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யனகான் போதை பொருள் வைத்திருந்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். உத்தரவுஆர்யனின் ஜாமின் மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி என்.டபிள்யு சாம்ப்ரே, அக்., 28ல் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு விபரம் வெளியானது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:ஆர்யன் கான் மொபைல் போனில் உள்ள 'வாட்ஸ் ஆப்' பதிவுகளில், அவர் நண்பர்களுடன் சேர்ந்து போதை பொருள் பயன்படுத்த திட்டமிட்டு இருந்ததை நிரூபிக்கும் ஆதாரங்கள் எதுவும் இல்லை. அவர் சட்ட விரோத குற்றம் புரிந்ததற்கான சான்றுகளும் போதுமானதாக இல்லை.

ஆர்யன் மற்றும் அவரது நண்பர்கள் இருவருக்கும் குற்றம் செய்யும் நோக்கம் இல்லை என்பதால், அதற்கான வலுவான ஆதாரங்களையும் அரசு தரப்பில் அளிக்க முடியவில்லை. மேலும், ஆர்யன் கானிடம் போதைப் பொருள் இல்லை; அவரது நண்பர்களிடம் அதுவும் மிகச் சிறிய அளவிற்கே இருந்துள்ளது.


ஜாமின்

இது போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் ஒன்று கூடி சட்ட விரோத செயல்புரிய திட்டமிட்டனரா என்பதையும், அதன் பின் போதுமான ஆதாரங்கள் உள்ளதா எனவும் நீதிமன்றம் முதலில் ஆய்வு செய்யும். இந்த அடிப்படை அம்சங்கள் இந்த வழக்கில் பலவீனமாக உள்ளதால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X