பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : நவ 20, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
நவம்பர் 21, 1970திருச்சி அருகே உள்ள திருவானைக்காவலில், 1888 நவ., 7ம் தேதி பிறந்தவர் சந்திரசேகர வெங்கட ராமன். 18வது வயதில், இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கோல்கட்டா பல்கலையில் இயற்பியல் பேராசிரியராகவும், பெங்களூரு இந்திய அறிவியல் கழக இயக்குனராகவும், இயற்பியல் துறை தலைவராகவும் பணியாற்றினார்.'கடல் ஏன் நீல நிறமாகத் தோன்றுகிறது?' என்ற கேள்விக்கு, 200 ரூபாய் செலவில் தானே

இதே நாளில் அன்று

நவம்பர் 21, 1970

திருச்சி அருகே உள்ள திருவானைக்காவலில், 1888 நவ., 7ம் தேதி பிறந்தவர் சந்திரசேகர வெங்கட ராமன். 18வது வயதில், இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கோல்கட்டா பல்கலையில் இயற்பியல் பேராசிரியராகவும், பெங்களூரு இந்திய அறிவியல் கழக இயக்குனராகவும், இயற்பியல் துறை தலைவராகவும்
பணியாற்றினார்.'கடல் ஏன் நீல நிறமாகத் தோன்றுகிறது?' என்ற கேள்விக்கு, 200 ரூபாய் செலவில் தானே உருவாக்கிய கருவி மூலம் விடை கண்டுபிடித்தார். இது, 'ராமன் விளைவு' என்று அழைக்கப்படுகிறது. இதற்காக, 1930-ல், 'நோபல்' பரிசு பெற்றார். இந்தியாவில் மட்டுமே படித்த ஒருவர், நோபல் பரிசு பெற்றது அதுவே முதல் முறை.
கடந்த, 1929-ல் பிரிட்டிஷ் அரசு, 'நைட்ஹுட், சர்' பட்டங்கள் வழங்கி சிறப்பித்தது. 1954-ல், 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது. பெங்களூரில் துவக்கிய, ராமன் ஆய்வு மையத்தில் இறுதிக் காலம் வரை பணியாற்றினார். 1970 நவ., 21ம் தேதி தன், 82வது வயதில் இயற்கை எய்தினார்.
சர்.சி.வி.ராமன் காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
24-நவ-202121:13:57 IST Report Abuse
vbs manian உண்மை. ராமானுஜத்துக்கும் கிடைத்திருக்க வேண்டும். இளம் வயதிலேயே காலம் ஆகி விட்டார்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
24-நவ-202118:57:14 IST Report Abuse
Bhaskaran அவ்ரகண்டுபிடிப்புகளுக்கு பெரும் துணை நின்ற உதவியாளர் பெயர் மறைக்கப்பட்டது ( கண்டுபிடித்ததே உதவியாளர் தான் என்றும் பேச்சு உண்டு )
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X