இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : நவ 20, 2021 | கருத்துகள் (2)
Share
நவம்பர் 21, 1970திருச்சி அருகே உள்ள திருவானைக்காவலில், 1888 நவ., 7ம் தேதி பிறந்தவர் சந்திரசேகர வெங்கட ராமன். 18வது வயதில், இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கோல்கட்டா பல்கலையில் இயற்பியல் பேராசிரியராகவும், பெங்களூரு இந்திய அறிவியல் கழக இயக்குனராகவும், இயற்பியல் துறை தலைவராகவும் பணியாற்றினார்.'கடல் ஏன் நீல நிறமாகத் தோன்றுகிறது?' என்ற கேள்விக்கு, 200 ரூபாய் செலவில் தானே

இதே நாளில் அன்று

நவம்பர் 21, 1970

திருச்சி அருகே உள்ள திருவானைக்காவலில், 1888 நவ., 7ம் தேதி பிறந்தவர் சந்திரசேகர வெங்கட ராமன். 18வது வயதில், இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கோல்கட்டா பல்கலையில் இயற்பியல் பேராசிரியராகவும், பெங்களூரு இந்திய அறிவியல் கழக இயக்குனராகவும், இயற்பியல் துறை தலைவராகவும்
பணியாற்றினார்.'கடல் ஏன் நீல நிறமாகத் தோன்றுகிறது?' என்ற கேள்விக்கு, 200 ரூபாய் செலவில் தானே உருவாக்கிய கருவி மூலம் விடை கண்டுபிடித்தார். இது, 'ராமன் விளைவு' என்று அழைக்கப்படுகிறது. இதற்காக, 1930-ல், 'நோபல்' பரிசு பெற்றார். இந்தியாவில் மட்டுமே படித்த ஒருவர், நோபல் பரிசு பெற்றது அதுவே முதல் முறை.
கடந்த, 1929-ல் பிரிட்டிஷ் அரசு, 'நைட்ஹுட், சர்' பட்டங்கள் வழங்கி சிறப்பித்தது. 1954-ல், 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது. பெங்களூரில் துவக்கிய, ராமன் ஆய்வு மையத்தில் இறுதிக் காலம் வரை பணியாற்றினார். 1970 நவ., 21ம் தேதி தன், 82வது வயதில் இயற்கை எய்தினார்.
சர்.சி.வி.ராமன் காலமான தினம் இன்று!

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X