முதல்வர் ஸ்டாலினை வரவேற்க லட்சம் பேரை திரட்டும் தி.மு.க.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினை வரவேற்க லட்சம் பேரை திரட்டும் தி.மு.க.,

Added : நவ 20, 2021
Share
கோவை: கோவை வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, ஒரு லட்சம் பேர் திரண்டு நின்று, வரவேற்பு அளிக்க, தி,மு.க.,வினர் ஏற்பாடு செய்கின்றனர்.தமிழக சட்டசபை தேர்தலில், கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளையும் தி.மு.க., இழந்தது. எனவே, உள்ளாட்சி தேர்தலில் ஜெயித்துக் காட்டவும், கட்சியை வளர்க்கவும், மாவட்ட பொறுப்பாளராக, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை, முதல்வர் ஸ்டாலின்

கோவை: கோவை வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, ஒரு லட்சம் பேர் திரண்டு நின்று, வரவேற்பு அளிக்க, தி,மு.க.,வினர் ஏற்பாடு செய்கின்றனர்.தமிழக சட்டசபை தேர்தலில், கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளையும் தி.மு.க., இழந்தது. எனவே, உள்ளாட்சி தேர்தலில் ஜெயித்துக் காட்டவும், கட்சியை வளர்க்கவும், மாவட்ட பொறுப்பாளராக, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை, முதல்வர் ஸ்டாலின் நியமித்திருக்கிறார்.இவர், மாவட்டம் முழுதும், 150 இடங்களில், 'மக்கள் சபை' நிகழ்ச்சி நடத்தி, 1.41 லட்சம் மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றிருக்கிறார்.ஏற்கனவே நிறைவேற்றியுள்ள திட்டங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், நலத்திட்ட உதவி வழங்கவும், புதிய திட்டங்களை துவக்கி வைக்கவும், தமிழக முதல்வர் ஸ்டாலினை அழைத்து வருகிறார்.இவ்விழா, கோவை வ.உ.சி., மைதானத்தில் நாளை (22ம் தேதி) நடக்கிறது. இதற்காக, ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்க, ஒரு லட்சம் பேரை திரட்ட தி.மு.க., வினர் முடிவு செய்திருக்கின்றனர்.கோவை அவிநாசி ரோட்டில், விமான நிலையம் முதல் வ.உ.சி., மைதானம் வரை, 10 கி.மீ., துாரத்தை, தலா ஒரு கி.மீ., வீதம், 10 பகுதிகளாக பிரித்து, 10 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் தனித்தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலினை வரவேற்க வேண்டும். அவரவர் வசதிக்கேற்ப கரகாட்டம், பொம்மலாட்டம், செண்டை மேளம் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்து கெள்ளலாம். என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X