சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொன்னை தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் ராணிப்பேட்டை- சித்தூர் போக்குவரத்து பாதிப்பு

Added : நவ 20, 2021
Share
Advertisement
வேலுார்:பொன்னை தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், ராணிப்பேட்டை- சித்துார் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஆந்திரா மாநிலம், கலவகுண்டா அணையிலிருந்து அளவுக்கதிமாக தண்ணீர் திறக்கப் பட்டதால், பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பொன்னை தரைப்பாலம் இன்று மாலை அடித்துச் செல்லப்பட்டது.ராணிப்பேட்டையிலிருந்து ஆந்திரா மாநிலம், சித்துாருக்கு
 பொன்னை தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் ராணிப்பேட்டை- சித்தூர் போக்குவரத்து பாதிப்பு

வேலுார்:பொன்னை தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், ராணிப்பேட்டை- சித்துார் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆந்திரா மாநிலம், கலவகுண்டா அணையிலிருந்து அளவுக்கதிமாக தண்ணீர் திறக்கப் பட்டதால், பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பொன்னை தரைப்பாலம் இன்று மாலை அடித்துச் செல்லப்பட்டது.

ராணிப்பேட்டையிலிருந்து ஆந்திரா மாநிலம், சித்துாருக்கு வேலுார் வழியாக 100 கி.மீ., துாரம் சுற்றிக் கொண்டு செல்கின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், வன்னிவேடு இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த பிரகாஷ், 28, என்பவர் வாலாஜாபேட்டை பாலாற்றை வேடிக்கை பார்க்கச் சென்ற போது தவறி விழுந்தார்.அவரை காப்பாற்ற சென்ற காமேஷ், 30, என்பவர் வெள்ளத்தில் குதித்த போது இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர்.

ஆந்திரா மாநிலம், சித்துார் மாவட்டம், பலமனேர் அருகே மடியேரி ஏரி நிரம்பி வழிவதால், வேலுார் மாவட்டம், குடியாத்தம் மோர்த்தானா அணை நிரம்பி வினாடிக்கு 16,389 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், 25 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம், பேத்தமங்கலம் அணையிலிருந்து மதியம் 60 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டதால், வாணியம்பாடி, ஆம்பூர் பாலாற்று வழியாக செங்கல்பட்டு அருகே கடலில் கலக்க சென்று கொண்டுள்ளதால், கரையோர மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என டாம்டாம் போடப்பட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X